India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
* கட்டுவீர ஆஞ்சநேயர் கோயில்
*ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோயில்
* தீர்த்தமலை கோவில்
* பென்னேஸ்வரர் கோயில்
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

கிருஷ்ணகிரி மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04343- 292275) புகாரளிக்கலாம். *இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க*

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <

கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.14) காய்கறிகள் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.16-20, உருளை: ரூ.25, பெரிய வெங்காயம்: ரூ.30, மிளகாய்: ரூ.40, கத்திரி: ரூ.18, வெண்டைக்காய்: ரூ.36, பீர்க்கங்காய்: ரூ.22, சுரைக்காய்: ரூ.14, புடலங்காய்: ரூ.26, பாகற்காய்: ரூ.20, அவரை: ரூ.28, கேரட்: ரூ.70, பீன்ஸ்: ரூ.50 என விற்பனை செய்யப்படுகின்றன.

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account -க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் புகார் பண்ணுங்க. (HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030) பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

கிருஷ்ணகிரியில் தொடர் பொங்கல் விடுமுறையொட்டி சென்னை, வேலூர், திருவண்ணாமலை, இராயக்கோட்டை, தருமபுரி, சேலம், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் நெரிசலின்றி பாதுகாப்பாக பயணிக்கலாம் என்று கிருஷ்ணகிரி போக்குவரத்து மண்டல இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜனவரி 16 (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்தாலோ அல்லது மது பாட்டில்களை கொண்டு சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த லிங்கிலோ அல்லது கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0422-2247917, தொழிலாளர் இணை ஆணையர் – 0427-2405746, எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர்!

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <
Sorry, no posts matched your criteria.