Krishnagiri

News January 15, 2026

கிருஷ்ணகிரி மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>இந்த இணையதளத்திற்கு <<>>செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

News January 15, 2026

கிருஷ்ணகிரியில் முக்கிய அரசு எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

News January 15, 2026

கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் பொங்கல் வாழ்த்து

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் இன்று (ஜன.15) பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட மக்கள் அனைவருக்கும் தனது இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். உழவர்களின் உழைப்பைப் போற்றும் இந்தத் திருநாளில், மக்கள் அனைவரும் வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்திய அவர், பண்டிகையைச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் பாதுகாப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார்.

News January 15, 2026

கிருஷ்ணகிரி: பொங்கல் நேரத்தில் கரண்ட் கட்டா? உடனே CALL!

image

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தடையற்ற மின்சாரம் வழங்க காஞ்சிபுரம் மின்சார வாரியம் உறுதி பூண்டுள்ளது. ஒருவேளை மின் தடை ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம். 94987 94987 என்ற எண்ணிற்கு அழைத்து உங்கள் மின் இணைப்பு எண்ணைக் கூறினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் பிரச்னையை சரிசெய்வார். பொங்கல் ஒளிமயமாக அமைய மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 15, 2026

கிருஷ்ணகிரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

News January 15, 2026

கிருஷ்ணகிரி காவல்துறை முக்கிய அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட மக்கள் அனைவருக்கும் இன்று (15.01.2026) மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உழவர் திருநாளான இன்று, மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியுடனும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றியும் பொங்கலைக் கொண்டாடுமாறு காவல்துறை சார்பில் சமுக வலைத்தளங்களில் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.

News January 15, 2026

கிருஷ்ணகிரி: கணவன் தொல்லையா? உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கிருஷ்ணகிரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8682928640-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!

News January 15, 2026

கிருஷ்ணகிரி: பதற்றத்தால் பறிபோன உயிர்!

image

சோடத்தான் கொட்டாய் பகுதியை சேர்ந்த மேஸ்திரி, பிரபாகரன் (22). இவர் நேற்று (ஜன.14) மாலை பைக்கில் ஊத்தங்கரையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கொடமாண்டபட்டி கூட்டு ரோட்டில் முன்னால் சென்ற வாகனம் திடீரென வளைந்தது. இதனால் பதற்றமடைந்த பிரபாகரன் செய்வதறியாது, நிலைதடுமாறி சாலையோர சுவர் மீது மோதினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

கிருஷ்ணகிரி இளைஞர்கள் கவனத்திற்கு…

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்புகள் மற்றும் புதுமையாளர்களுக்காக, 15வது Source India – Electronics Supply Chain Expo கண்காட்சி நடத்தப்படுகிறது. ELCINA அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு, StartupTN ஆதரவுடன் நடைபெறும் இந்நிகழ்வு, பிப்ரவரி 10, 11 தேதிகளில் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது.

News January 14, 2026

கிருஷ்ணகிரி: கணவருடன் சண்டை.. மனைவி விபரீதம்

image

நகாரசம்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடைய மனைவி முருகம்மாள். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் டிச.25 அன்று வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு பெங்களுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் ஜன-13 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!