Krishnagiri

News January 27, 2026

கிருஷ்ணகிரி: ATMல் அதிகம் பணம் எடுப்பவரா நீங்கள்..?

image

மத்திய அரசு & ரிசர்வ் வங்கியின் புதிய முயற்சியாக, இனி ஏடிஎம்களில் சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும் தடையின்றி கிடைக்கும்! டிஜிட்டல் பரிவர்த்தனை பெருகினாலும், மக்களின் சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்க ‘ஹைபிரிட் ஏடிஎம்கள்’ மூலம் ரூ.10, ரூ.20, ரூ.50 போன்ற சிறிய நோட்டுகளும் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இனி பெரிய நோட்டுகளை மாற்ற அலையத் தேவையில்லை. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 27, 2026

கிருஷ்ணகிரி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்! CLICK

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க!

News January 27, 2026

கிருஷ்ணகிரி: 10ஆவது படித்தால் போஸ்ட் ஆபீஸ் வேலை!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே…, இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் பண்ணுங்க. இதற்கு பிப்.10ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 27, 2026

கிருஷ்ணகிரி: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE பண்ணுங்க!

News January 27, 2026

கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு; CLICK NOW!

image

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும். 2) அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். உடனே ஷேர் பண்ணுங்க.

News January 27, 2026

கிருஷ்ணகிரியில் ஷாக்; ரோட்டில் கத்தியோடு நின்ற நபர்!

image

போச்சம்பள்ளி அடுத்த மடத்தனுர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (61). இவர் நேற்று (ஜன.26) மாலை வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கீழ் மைலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (46) வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பின்னர் அவரிடம் இருந்து ரூ.5,100 பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 27, 2026

கிருஷ்ணகிரியில் மூதாட்டி திடீர் மரணம்!

image

ஓசூர் அடுத்த அன்னை சத்யா நகர் பகுதியில் சேர்ந்தவர் சரோஜா 60. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று (ஜன.26) வீட்டில் இருந்து வெளியே சென்ற போது திடிரென மூக்கண்டப்பள்ளி சாலையில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து போது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 27, 2026

கிருஷ்ணகிரி: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

image

கிருஷ்ணகிரி உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE IT!

News January 27, 2026

கிருஷ்ணகிரியில் லட்சக்கணக்கில் கொள்ளை!

image

தேன்கனிக்கோட்டை கடைவீதியில் பேன்சி கடை நடத்தி வருபவர் கிருஷ்ணன் (60). நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 27, 2026

கிருஷ்னகிரியில் பட்ட பகலில் துணிகரம்!

image

ராயக்கோட்டை அருகே ஆர்.குட்டூர் கிராமத்தை ரோஜா (38). இவர் நேற்று முன்தினம் மதியம் குட்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ரோஜாவின் வாயை மூடி நகையை கழற்றி கொடுக்குமாறு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் ரோஜாவிடம் இருந்து 7 பவுன் நகையை பறித்து மர்ம நபர்கள் தப்பினர். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!