India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
J.காருப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த முனிராஜ் என்பவரது 17 வயது மகளை காதலித்த அதே ஊரைச் சேர்ந்த வெங்கட்ராஜ் 6 மாதங்களுக்கு முன்பு போக்சோ வழக்கில் சிறை சென்று வெளி வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு 2 மணியளவில் வெங்கட்ராஜ் நண்பருடன் முனிராஜை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து விட்டு அவரது மகளை அழைத்துக் கொண்டு தப்பியுள்ளார். வெங்கட்ராஜ் மற்றும் அவரது நண்பரை கெலமங்கலம் போலிசார் தேடி வருகின்றனர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் (07.08.2024) அனுசரிக்கபடுகிறது. அன்று கிருஷ்ணகிரியில் காலை 9 மணி அளவில் அமைதிப்பேரணி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ கழக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி சென்ட்ரல் தியேட்டர் முதல் இராயக்கோட்டை மேம்பாலம் வரை இப்பேரணி நடைபெறவுள்ளது. இறுதியில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு மரியாதை செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் 30 மாவட்டங்களுக்கு இன்று மழை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றிரவு 8.30 மணி வரை லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் இன்று வரை 51% கூடுதல் மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்துள்ளது.
சர்வதேச நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. நம்ம கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நண்பர்களோடு ஊர் சுற்றுவது, கிரிக்கெட் ஆடியது, பேருந்து நிறுத்ததில் அமர்ந்து அரட்டை அடிப்பது, தோழிகளுடன் செல்ஃபி எடுப்பது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு செய்த சேட்டைகளுன்டு. நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, உங்க நண்பர்களுக்கு சேர் செய்யுங்க.
தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத் திட்டம் மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5,64,104 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை யாரப் தர்கா உரூஸ் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று இரவு வருகை புரிந்தார். இந்நிகழ்ச்சிக்காக வருகை புரிந்த அமைச்சருக்கு எம்எல்ஏ பிரகாஷ் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதன் கட்டுமான பணிகளை கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர். அவர்களிடம் பாலத்தின் உறுதித் தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஓசூர் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மஞ்சு ஸ்ரீ நகரில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த நிலையில், ஓசூர் அருகே உள்ள கொத்தூர் சேர்ந்த சீனிவாசன், சுனில், தனுஷ், மாத்தம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முருகேஷ் ஆகிய 4 பேரை சிப்காட் காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான மத்திகிரி போலீசார் இன்று கைது செய்து ஒரு டன் கம்பிகளை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் 30 வது மாவட்டமாக தர்மபுரி மாவட்டத்திலிருந்து உருவானது. ‘கிருஷ்ணா’ என்பது கறுப்பு என்றும் “கிரி” என்பது மலை என்றும் குறிக்கிறது. கறுப்பு கிரானைட் மலைகளுடன் அமைந்துள்ளதால் இந்த மாவட்டம் கிருஷ்ணகிரி என பெயர் பெற்றது. மேலும், கிருஷ்ணதேவராயர் ஆட்சியின் கீழ் இப்பகுதி இருந்ததால் கிருஷ்ணகிரி என்ற பெயர் வந்திருக்கலாம் என சிலர் தெரிவிக்கின்றனர். பெயர் காரணத்தை பகிரவும்.
கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் ஊராட்சிகளில் இயங்கி வரும் கிரானைட் மற்றும் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களை சேலம் சரக காவல் துறை தலைவர் இ.எஸ். உமா மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு , மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். மேலும், சட்ட விரோத கனிம கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.