Krishnagiri

News January 29, 2026

கிருஷ்ணகிரி: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

கிருஷ்ணகிரி மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு,<> Aadhaar மொபைல்<<>> ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் நீங்கள் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடு செய்யலாம். *இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க*

News January 29, 2026

கிருஷ்ணகிரி: SBI வங்கியில் 165 காலியிடங்கள்! APPLY NOW

image

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!

News January 29, 2026

கிருஷ்ணகிரி: இனி ரேஷன் கடை வேண்டாம்; 1 SMS போதும்!

image

கிருஷ்ணகிரி மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். உடனே SHARE பண்ணுங்க.

News January 29, 2026

கிருஷ்ணகிரி: உங்கள் விரல் நுனியில் வங்கி கணக்கு!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. SHARE IT!

News January 29, 2026

கிருஷ்ணகிரியில் தாய் விபரீத முடிவு!

image

கிருஷ்ணகிரி அடுத்த முத்தாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சித்ரா (25). திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில் டாடா நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தொடர்ந்து சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு இவர் நேற்று (ஜன.28) வீட்டில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று சித்ரா பரிதாபமாக உயிர் இழந்தார்.

News January 29, 2026

கிருஷ்ணகிரியில் 1 கோடி சுருட்டிய மோசடி குமபல்!

image

கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவி துணை மின்நிலையத்தில் 2017-ம் ஆண்டு சூப்பர்வைசராக பணியாற்றியவர் கனேசன் (53) மற்றும் அகோண்டட் செல்வம். இவர்கள் இருவரும் கணக்கில் காட்டாமல் மின் கட்டண பணம் ரூ.1 கோடியே 29 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உதவி பொறியாளர் சரவணன் அளித்த புகாரின் பேரில் 2 பேரையும் மாவட்ட குற்றபிரிவு போலீசார் நேற்று (ஜன.28) கைது செய்தனர்.

News January 29, 2026

ஓசூரில் சரமாரி தாக்குதல்; சிதறிய பேருந்து கண்ணாடி!

image

ஓசூர் பேருந்து நிலையத்தில் நேற்று (ஜன.29) தருமபுரியைச் சேர்ந்த வேலுசாமி (34) காணாமல் போன தன் பையை தொலைத்துள்ளார். இதை தேட அனுமதி மறுத்த கர்நாடக ஓட்டுநர் ஆனந்தாவுடன் வேலுசாமி தகராறில் ஈடுபட்டார். இதில் வேலுசாமி பேருந்தின் கண்ணாடியை உடைத்தார். இது குறித்து ஓட்டுநர் ஆனந்தா அளித்த புகாரின் அடிப்படையில், பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியதற்காக ஓசூர் நகர போலீஸார் நேற்று (ஜன.28) வேலுசாமியை கைது செய்தனர்.

News January 29, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை வேலைவாய்ப்பு முகாம்!

image

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜன. 30ஆம் தேதி நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடைபெறும் இம்முகாமில் 10, 12-ஆம் வகுப்பு, பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ பயின்றவர்கள் பங்கேற்கலாம்.

News January 29, 2026

கிருஷ்ணகிரி: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி!

image

கிருஷ்ணகிரி மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. முதல் பட்டதாரி சான்றிதழ்
4. கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5. விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7. குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <>லிங்கில் கிளிக்<<>> செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

கிருஷ்ணகிரி: துப்புரவு பணியாளர் மர்ம மரணம்!

image

ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த துப்புரவு பணியாளர் சரோஜா (60). வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வெகு நேரம் ஆகியும் திரும்பாததால் குடும்பத்தினர் தேடினர். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!