India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை<

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

நாகரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (73). இவர் கடந்த ஜனவரி 22-ம் தேதி தோட்டத்தில் குப்பைகளுக்கு தீ வைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இவர் மீது தீ பரவியது. இதில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜன.30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரியை சேர்ந்த கூலி தொழிலாளி மாதேஷ் (39). இவர் ஓசூரில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு தொடர் குடி பழக்கம் இருந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.29) அக்ரஹாரம் பகுதியில் நடந்து செல்லும் போது திடீரென மயங்கி விழுந்தார். இவரை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <

மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<

ராயக்கோட்டை அடுத்த பழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவருக்கும் இவரது தம்பி பெத்தேகவுடாவுக்கும் நிலப்பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.29) நிலத்தின் அருகே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் சண்டையிட்டு கொண்டனர். இதையடுத்து இருதரப்பையும் சேர்ந்த கோவிந்தன், மஞ்சுளா, ரமேஷ், சந்திரம், பெத்தேகவுடா ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். உடனே SHARE பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் பபிப்ரவரி 1-ம் தேதி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி மது விற்பனை செய்தாலோ அல்லது கடத்திச் சென்றாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சிங்காரப்பேட்டை அடுத்த பாவக்கல் கிராமத்தை சேர்ந்தவர் கெளசல்யா. இவருக்கும் இவரது கணவர் சதீஷ்குமாருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து கெளசல்யாவின் தாய் மல்லிகா மற்றும் தங்கை சதீஷ் குமாரிடம் கேட்ட போது தகராறு ஏற்பட்டது. இது கைகலப்பாக மாற சதீஷ் குமார் மாமியார் மற்றும் மச்சினிச்சியை சரமாரியாக தாக்கியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.