India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் சி.சங்கு. இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியின் தமிழ்நாடு சிறப்பு படையின் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார் .
கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னதக்கேபள்ளியில் எழுந்தருளியுள்ள நாகம்மன் திருக்கோவிலில் நாக சதுர்த்தியை முன்னிட்டு 16-வது ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவில் 52 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, உலக நலன் வேண்டியும், மழை வேண்டியும் வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக (தலைமையிடம்) பணியாற்றி வந்த விவேகானந்தன் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக கே.சங்கர் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். சேலம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த அவர், தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை சாலையில், சுமார் ரூ.100 கோடி மதிப்பில், புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையின் கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் சரயு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழையே பெய்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தின் 6 வட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கிரியாடினின் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 80 மாணவ மாணவியர்கள் பயிலும் இப்பள்ளியில் வகுப்பறைகள் ஆபத்தான நிலையில் இருப்பதால் கடந்த 2 ஆண்டுகளாக மரத்தடியில் பாடம் நடத்தப்படுகிறது. புதிய வகுப்பறை கேட்டு கோரிக்கை வைத்தும் பயன் இல்லாததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள நேரலகிரி வனப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை முகாமிட்டிருந்தது. இந்த யானை அவ்வப்போது விவசாய நிலங்களை நாசம் செய்து வந்தது. கடந்த வாரம் வனத்துறை மற்றும் மின் ஊழியர்களை தாக்கி இருவர் படுகாயமடைந்தனர். இந்த யானை பல்வேறு பகுதிகளில் சுற்றி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் ரோந்து காவலர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை – 9498170295, பருகூர் – 8825405987, கிருஷ்ணகிரி – 8248346235, ஓசூர் – 9498185796, தேன்கனிக்கோட்டை – 9443513972. அவசர உதவிக்கு இந்த எண்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 73.7 மி.மீ. மழை பதிவானது. இதேபோல் அஞ்செட்டி 2.4, பாரூர் 3.4, தேன்கனிக்கோட்டை 5.0, ஒசூா் 14.8, நெடுங்கல் 4.8, பெனுகொண்டாபுரம் 7.2, போச்சம்பள்ளி 5.2, சூளகிரி 2.0, ஊத்தங்கரை 30, சின்னார் அணை 4, கெலவரப்பள்ளி அணை 53, கிருஷ்ணகிரி அணை 37, பாம்பாறு அணை 29.மி. மீ மழையும் பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.