India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி நகராட்சி, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மருத்துவ அவசர சிகிச்சை மையம் அமைக்கவுள்ள கட்டிட வளாகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ.ஆ.ப. இன்று 27.05.2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் மரு.பூவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.மது மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அனகோடி பகுதியிலிருந்து சந்தூர் நோக்கி நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற பொன்னுசாமி (45) என்பவர் மீது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பொன்னுசாமி உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பேருந்து நிலையம் எதிரே இன்று காலை 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் சாலையை கடக்கும் போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க செல்வம் என்பவர் காலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை ஆத்தூர் மாரியம்மன் கோவில் என்ற இடத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த சிங்காரப்பேட்டை அடுத்த மல்லிப்பட்டியைச் சேர்ந்த மணி மற்றும் பெருமாள் ஆகிய இருவரும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், குண்டுமல்லி விளைச்சல் அதிகரித்துள்ளது. ஓசூர் மலர்சந்தைக்கு வரத்து அதிகரித்து குண்டுமல்லி கிலோ ₹250 முதல் ₹300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சன்னமல்லியும் ₹300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் மழையால் வரத்து அதிகரிக்கும் என்பதால், குண்டுமல்லியின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
போச்சம்பள்ளி புகழ்பெற்ற வார சந்தையில் என்று மே 26 ஆம் தேதி மொட்டை உரிப்பு தேங்காய் ஒன்றின் கொள்முதல் விலை 13 முதல் 20 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரங்களில் ஏழு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் அதிகப்படியான சுபமுகூர்த்த தினங்கள் உள்ளதால் தேங்காய் விலை ஏற்றத்தை கண்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். விலை ஏற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் செயற்குழு கூட்டம், வாக்கு எண்ணும் மைய முகவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை சாலையில் உள்ள தேவராஜ் மஹாலில் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் எம்.எல்.ஏ முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி பொறுப்பு அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் பி.எம்.சி பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற மே 27 அன்று ஓசூர் பி.எம்.சி பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 400 மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் 1500 மேற்பட்ட காலிபணியிடங்களை நிரப்பட உள்ளது.
ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தக்காளி மண்டி பகுதியில் உரிய அனுமதி பெறாமல் பட்டாசு கடை நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அங்கு சென்ற காவல் துறையினர் மஜாஷ் அகமத்(39), த/பெ அப்சல் பாஷா, அனிஷ்(26) த/பெ அஷேன், முரளி(27) த/பெ. தியாகராஜன் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.9,70,000 மதிப்புடைய 509 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்தனர்.
ஓசூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 பேரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்களது பையில் 3 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையில் அவர்கள் நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த நெல்லையப்பன் (46), அருண்குமார் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.
Sorry, no posts matched your criteria.