India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி தொகுதியில் 3வது சுற்று முடிவில் காங்கிரஸ் சுமார் 22,050 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் 61244 வாக்குகளும், பாஜக 32079 வாக்குகளும், அதிமுக 39194 வாக்குகளும், நாம் தமிழர் 11960 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி தொகுதியில் இரண்டாவது சுற்று முடிவில் காங்கிரஸ் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 2வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் 45,949 வாக்குகளும், பாஜக 22,124 வாக்குகளும், அதிமுக 24920 வாக்குகளும், நாம் தமிழர் 8110 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் 7644 வாக்குகள் பெற்று முன்னிலை. காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 20868 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 13224 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், பாஜக வேட்பாளர் நரசிம்மன் 9524 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும், நாதக வேட்பாளர் வித்யா ராணி வீரப்பன் 3503 வாக்குகள் பெற்று நான்காம் இடத்திலும் உள்ளனர்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, கிருஷ்ணகிரி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் மொத்தம் 71.37% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக சார்பில் கோபிநாத்தும் (காங்), அதிமுக சார்பில் வி.ஜெயபிரகாஷும், பாஜக சார்பில் நரசிம்மனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
2019 மக்களவைத் தேர்தல் கிருஷ்ணகிரி தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஏ.செல்லக்குமார் 1,56,765 (13.49%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத்தும், அதிமுக சார்பில் ஜெயப்பிரகாஷூம் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?
ராயக்கோட்டை பேருந்து நிலையம் கட்டி சுமார் 30 வருடங்களாகிறது. அது பராமரிப்பின்றி செயல்பட்டு வந்ததால் பேருந்து செல்லக்கூடிய தரை முழுவதும் சிமெண்ட் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பேருந்து டயர்கள் விரைவில் பழுதாகும் நிலை ஏற்படுகிறது. அதோடு பயணிகளும் அச்சத்தோடு செல்கின்றனர். இதனை சீரமைக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலத்தில் கலைஞர் கருணாநிதி 101வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், நகர செயலாளர் தஸ்தகீர் ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவை முன்னிட்டு திமுக கொடியை ஏற்றி வைத்து, கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை போலீசார், வெப்பாலம்பட்டி அருகே பெட்டி கடையில் மது விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி அந்தப் பகுதியில் ஒரு பெட்டி கடையில் மது விற்பனை செய்த லட்சுமி (40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து 8 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஓசூரில் பகுதியில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில் வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற 381 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வேலைவாய்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் நாகேஸ்வரன் வரவேற்றார். இதில், இன்போசிஸ் நிறுவன துணைத்தலைவர் விக்டர் சுந்தர்ராஜ் கலந்துகொண்டு தேர்வான மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி உரையாற்றினார்.
Sorry, no posts matched your criteria.