India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களவைத் தேர்தல்:
*காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்- 4,90,279 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ்- 2,98,959 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் நரசிம்மன்- 2,12,502 வாக்குகள்
*நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன்- 1,06,079 வாக்குகள்
போச்சம்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகள் நள்ளிரவில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்துவாங்கியது. வெள்ளைபாறையூரில் வெள்ளம் ஊருக்குள் புகுந்து சாலைகள், விளைநிலங்கள், கிணறுகள் நிரம்பின. 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போதும் அதேபோல் காட்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் நேரில் பார்த்து மகிழ்ந்தனர். எனினும் இரவில் பெய்த மழையால் அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை.
தமிழக முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டம் வேப்பனபள்ளி வட்டாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது என்று வேளாண்மை உதவி இயக்குநர் அறிக்கை வெளியிட்டார். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உர விதைகள் 50% மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த பகுதிக்குட்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்று வேளாண்மை உதவி இயக்குநர் சிவநதி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்காக நடுவர்களுக்கான பயிற்சி வகுப்பு மற்றும் தேர்வுகள் ஜூன், ஜூலை மாதம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, 18 முதல் 35வயதுவரம்பும், குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பும் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரம் அறிய, மேலாளர் காளிதாசனை 9994182296 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் வெற்றி. சுயேட்சைகள் உட்பட 27 பேர் போட்டியிட்ட நிலையில் 29 சுற்றுகளாக வாக்குகள் என்னப்பட்டன. அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் 4,92,883 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 3,00,397 வாக்குகள் பெற்றார். வெற்றி பெற்ற வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சரயு அவர்கள் வெற்றி சான்றிதழை இன்று வழங்கினார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 4.42 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளார். தற்போதைய நிலவரப்படி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை 1.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் தற்போது 1, 30,768 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் சுற்றில் இருந்து தற்போது வரை முன்னணியில் உள்ளார்.
தற்போது 18 வது சுற்று முடிவில் 1,50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் – 177710 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாவது இடத்தில் அதிமுக 112195 ஓட்டுகளும், பாஜக – 86562 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாதக- 36832 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.
கிருஷ்ணகிரி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மதியம் 1 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்யாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து தற்போது வரை தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் முன்னிலையில் உள்ளார்.
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்- 83184 வாக்குகள் பெற்றுள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 52631 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
பாஜக : 41836
நாம் தமிழர்: 16908
காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் மூன்றாவது சுற்று முடிவில் 30553 வாக்குகள் முன்னிலை
Sorry, no posts matched your criteria.