Karur

News May 7, 2024

2 பைக்குகள் மோதியதில் படுகாயம்

image

குளித்தலை திம்மாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (24). இவர் தனது பைக்கில் குறப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது, அதே திசையில் பின்னால் அதிவேகமாக வந்த பைக் மோதியதில் சந்தோஷ் குமார் படுகாயம் அடைந்தார். திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சந்தோஷ் குமார் மனைவி மரகதவல்லி அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 6, 2024

41 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

கரூர் மாவட்டத்தில் மேல்நிலை வகுப்பு இரண்டாம் ஆண்டு பொது தேர்வில் 104 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 9086 தேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 41 பள்ளிகள் 100% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இதில் 08 அரசு பள்ளிகளும், 03 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 30 தனியார் பள்ளிகளும் அடங்கும் என கரூர் மாவட்ட கல்வி நிர்வாகம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 94.31% லிருந்து 95.90% ஆக உயர்ந்துள்ளது.

News May 6, 2024

கரூரில் மழைக்கு வாய்ப்பு

image

கரூர் மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

கரூர் மழைப்பொழிவு விவரம்

image

கரூர் மாவட்டத்தில் ஆங்காங்கு நேற்று (மே.05) மழைப்பெய்தது. அதன் மழைப்பொழிவு விவரத்தை சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன் படி, மாயனூர் பகுதியில் 3 சென்டி மீட்டரும், தேக்கடியில் 2 சென்டி மீட்டரும், கடவூரில் 2 சென்டி மீட்டரும், கிருஷ்ணராயபுரத்தில் 1 சென்டி மீட்டரும் பதிவானது. நாளை தமிழகத்தில் ஆங்காங்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

கரூர் மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் கரூர் மாவட்ட, தாலுகா வாரியாக பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

News May 6, 2024

12 ஆம் இடம் பிடித்த கரூர் மாவட்டம்

image

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கரூர் மாவட்டத்தில் 95.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் கரூர் மாவட்டம் 12 ஆம் இடம் பிடித்துள்ளது என கரூர் மாவட்ட கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

News May 6, 2024

கரூர்: 12ஆம் வகுப்பு தேர்வு – 95.90% பேர் தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், கரூர் மாவட்டத்தில் தேர்ச்சி 95.90% பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 94.08 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 97.40 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 6, 2024

கணவரால் தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளை காலணி பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கராஜ் மனைவி மீனாட்சி (44). இவரின் கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் மனவிரக்தியில் இருந்த மீனாட்சி வீட்டில் தூக்கு மாட்டி தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை.

News May 6, 2024

+2 மாணவர்களே இதை செய்யுங்கள்

image

கரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு 37,000 மேற்பட்ட மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளில் அறிந்து கொள்ளலாம்.

News May 6, 2024

பாதயாத்திரை சென்ற நபர் மீது பைக் மோதி விபத்து

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ரெத்தினம் பிள்ளை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் செல்வகுமார் (16). இவர் நேற்று கட்டாரிப்பட்டி சாலையில் பாதயாத்திரை ஆக நடந்து சென்று கொண்டிருந்தார். பின்னால் அதிவேகமாக வந்த பைக் மோதியதில் செல்வகுமார் படுகாயம் அடைந்தார். தோகைமலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.