Karur

News September 23, 2025

கரூர்: அரசு வேலை பெற அரிய வாய்ப்பு APPLY NOW!

image

கரூர் மக்களே, தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பல்வேறு Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி அறியலாம்.! SHARE IT!

News September 23, 2025

கரூர்: +2 போதும் 7267 அரசு வேலைகள்! உடனே APPLY

image

கரூர் மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதியில் வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். கடைசி தேதி – செப். 23 ஆகும். விவரங்களுக்கு இங்கு <>கிளிக் <<>>செய்யவும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக ஓருவருக்காவது உதவும்!

News September 23, 2025

கரூர் கோயில் நிலம் மீட்பு விவகாரம்; வழக்கு அக்டோபர் 29-க்கு ஒத்திவைப்பு

image

கரூர் மாவட்ட கோயில்களுக்கு சொந்தமாக சுமார் 500 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து மீட்க திருத்தொண்டர் சபையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். மேலும், 2015-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு மாயமான கோயில் சொத்துகள் தொடர்பான கோப்புகளையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

News September 23, 2025

கரூரில் ராணுவ வீரர் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் புலியூர் வெங்கடாபுரம் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி 76. முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு கடந்த ஒரு வருடமாக உடல் நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மயங்கிய அவரை கரூர் அரசு மருத்துவமனையை சேர்த்த போது அவர் உயிரிழந்தார். அவரின் மனைவி சரோஜா அளித்த புகாரின் பேரில் பசுபதி பாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 22, 2025

துணை முதலமைச்சரின் சந்தித்த செந்தில் பாலாஜி

image

கரூர் திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, இன்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து, கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொண்டதற்காக பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பு மற்றும் நன்றியுரைகள், கரூர் திமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தின.

News September 22, 2025

கரூரில் லாரி – தனியார் பஸ் மோதி விபத்து; 18 பேர் படுகாயம்!

image

கரூர், அரவக்குறிச்சி ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில், பகுதியில் தனியார் பஸ் சென்று கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கு முன்னால் மகாராஜா ஓட்டி சென்ற லாரி திடீரென பிரேக் போட்டு, பஸ் மீது மோதியது. இதில் 18 பேருக்கு மேல் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

News September 22, 2025

கரூர்: கிராம வங்கியில் ரூ.80,000 சம்பளத்தில் வேலை!

image

கரூர் மக்களே..வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,217 காலியாக உள்ள Manager, Assistant Manager நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளமாக ரூ.35,000 முதல் 80,000 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News September 22, 2025

கரூர்: LIC தொகையை செலுத்த இனி அலைய வேண்டாம்!

image

கரூர் மக்களே..LIC காப்பீட்டு தொகையை செலுத்த இனி அலையை வேண்டாம். உங்கள் மொபைல் போன் மூலமாக வீட்டில் இருந்த படியே செலுத்தலாம். <>’LIC digital App<<>>’ எனும் செயலியை உடனே பதிவிறக்கம் செய்து, பாலிசி எண், பிறந்த தேதி, மொபைல் எண், உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு தொகையை செலுத்தலாம். நீங்கள் தொகை செலுத்தியதற்கான ரசீது மின்னஞ்சல் அல்லது SMS மூலம் வழங்கப்படும். இந்த தகவலை உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News September 22, 2025

கரூர்: EPFO உறுப்பினர்களே – இனி கவலை வேண்டாம்!

image

கரூர் மக்களே..EPFO உறுப்பினர்கள் தங்கள் UAN Number-ஐ மறந்துவிட்டீர்களா? EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் <>கிளிக் <<>>செய்து மீட்கலாம்.
1. EPFO Portal – Know Your UAN பக்கம் செல்லவும்.
2. உங்கள் முழு பெயர், பிறந்த தேதி, மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
3. OTP-ஐ மொபைலில் பெற்று உறுதிப்படுத்தவும்.
4. சரியான விவரங்கள் வழங்கப்பட்டால், உங்கள் UAN எண்ணை திரும்ப பெறலாம்.

News September 22, 2025

கரூர்: அரசு வேலை பெற அரிய வாய்ப்பு APPLY NOW!

image

கரூர் மக்களே தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பல்வேறு Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இங்கே <>கிளிக்<<>> செய்து மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி அறியலாம்.! SHARE பண்ணுங்க

error: Content is protected !!