India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். (SHARE பண்ணுங்க)

கரூர் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய +2 படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5<
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

கரூர் மக்களே தமிழ்நாடு அரசின் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது. இதில் 35% அல்லது அதிகபட்சம் ₹3.50 லட்சம் மானியம் உண்டு. தவணை தவறாமல் செலுத்துவோருக்கு 6% வட்டி மானியமும் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு<

கரூரில் நடந்த இரு விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். மண்மங்கலம் அருகே கார் மோதியதில் மொபட்டில் சென்ற சுப்பிரமணி (55) பலியானார். வாங்கல் போலீசார் இதனை விசாரிக்கின்றனர். மற்றொரு விபத்தில், டி.செல்லாண்டிபாளையம் அருகே பைக் நிலைதடுமாறி தடுப்புச் சுவரில் மோதியதில் வடமாநில வாலிபர் சுர்ஜித் பவுரியா (20) உயிரிழந்தார். பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் பாப்பக்காபட்டியைச் சேர்ந்த 16 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியை, பொக்லைன் ஆபரேட்டர் கோபிநாத் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ள அந்தச் சிறுமி அளித்த தகவலின்படி, குழந்தைகள் நல அலுவலர் புகாரளித்தார். இதன்பேரில் குளித்தலை மகளிர் போலீசார் கோபிநாத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரூர் மாவட்டம் குப்புரெட்டிப்பட்டியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் மகேஸ்வரன், நேற்று தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அவரது தாய் தீபா அளித்த புகாரின் பேரில், நங்கவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச்செயல்களை தடுக்கும் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிப்பது இதன் முக்கிய நோக்கம் எனவும், அவசர நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Sorry, no posts matched your criteria.