India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச்செயல்களை தடுக்கும் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிப்பது இதன் முக்கிய நோக்கம் எனவும், அவசர நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். (பகிரவும்)

கரூர் மாவட்டம், தாந்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு (28.01.2026) அன்று கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக பிப்ரவரி 7, 2026 (சனிக்கிழமை) அலுவலக நாளாக நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும் . கரூர் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.

கரூர் மக்களே, சக்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1)இங்கு <
2) அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3)அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4) சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452-52525 எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் “HI” அனுப்பி தெரிஞ்சுக்கலாம். (SHARE பண்ணுங்க)

கரூர் மாவட்டம் வாங்கல் சாலையில் சுப்பிரமணி என்பவர் தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, எதிரே மதன்குமார் என்பவர் ஓட்டி வந்த பைக் சுப்பிரமணி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,000
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

கரூர் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

கரூர் மக்களே, யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள 173 Generalist and Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் பிப்.2ம் தேதிக்குள் இந்த லிங்கை <

கரூர் மாவட்டம் புகலூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானலட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள பிராய்லர் கோழி கடையில் வேலை பார்த்து வருகின்றார். நேற்று அவருடைய சகோதரி ஜோதியுடன் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவ்வழியே பிரகாஷ் ஒட்டி வந்த தண்ணீர் லாரி மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.