India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டம், சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு, கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், இடை நிற்றலை குறைக்கவும் தமிழக அரசால் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும் தொடர்புக்கு அந்தந்த தலைமை பள்ளி ஆசிரியர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி சாலையில், குணசேகர் என்பவர் தனது தாயார் ராமுத்தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனம் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த குணசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க <

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேட்டு மகாதானபுரம் மற்றும் பில்லா பாளையம் பகுதியில் வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் மதுவிற்ற சங்கர் மனைவி அன்னக்கிளி (55), வாசுதேவன் மனைவி ரேவதி (55) ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 52 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.