Karur

News January 28, 2026

கரூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)

News January 28, 2026

கரூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

News January 28, 2026

கரூர்: ரயில்வே வேலை! நாளை கடைசி

image

கரூர் மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! இந்தியன் ரயில்வேயில் குரூப் D 22,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 28, 2026

கரூர்: காவல்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் முதியோர் நலனுக்காக உதவி எண்” (14567)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண் முதியோர் மற்றும் அவர்களின் நலவாழ்வுக்கான தகவல், வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் தலையீட்டு சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும். மூதியோரின் பாதுகாப்பும் நலனும் கருதி, எந்த நேரத்திலும் இந்த எண்ணை அழைத்து உதவியை பெறலாம்.

News January 28, 2026

கரூர்: அடிக்கடி கரண்ட் கட் ஆகுதா?

image

கரூர் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில்<> இங்கே கிளிக் <<>>செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 28, 2026

கரூர்: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

News January 28, 2026

கரூர்: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

கரூர் மாவட்டம், தாந்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு (28.01.2026) இன்று கரூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக பிப்ரவரி 7, 2026 (சனிக்கிழமை) அலுவலக நாளாக நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார். SHARE IT

News January 27, 2026

கரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் 30.1.26 ஆம் தேதியன்று மாலை 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எரிவாயு நுகர்வோர்கள் மேற்படி நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சித்தலைவர் தங்கவேல், இன்று தெரிவித்துள்ளார்.

News January 27, 2026

கரூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

கரூரில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News January 27, 2026

கரூர்: 12th போதும்.. சூப்பர்வைசர் வேலை!

image

ஆதார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு
1) பதவிகள்: சூப்பர்வைசர், ஆபரேட்டர் (மொத்தம் 282 இடங்கள்)
2) கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
4) மாதச் சம்பளம்: ₹20,000/-
5) கடைசி தேதி: ஜனவரி 31, 2026.
6) விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!