Kanyakumari

News February 22, 2026

குமரியில் இன்றைய இரவு காவல் ரோந்து அதிகாரிகள்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, நேற்றைய (21.02.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News February 21, 2026

BREAKING: குமரி மாவட்ட வேட்பாளர்கள்

image

வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட நாதக முடிவு செய்த நிலையில் இன்று அக்கட்சியின் 234 வேட்பாளர்களையும் திருச்சியில் நடைபெறும் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026 -ல் சீமான் அறிவித்து வருகிறார்.
1. கன்னியாகுமரி – மரிய ஜெனிபர்
2.நாகர்கோவில் – மு,முத்துக்குமார்
3.குளச்சல் – ஆன்ஷி ஷோபா
4.பத்மாநாபபுரம் – சு.சீலன்
5. விளவங்கோடு – மரிய ஸ்டெல்லா
6.கிள்ளியூர் – பி.வ.ஹிம்லர்

News February 21, 2026

குமரி: ஆதார் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

குமரி மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்

1.இங்கே<> கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்

2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க

3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்

4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்

5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News February 21, 2026

கன்னியாகுமரி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு

image

கன்னியாகுமரி மக்களே; மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.

1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்கு பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.

ஷேர் பண்ணுங்க.

News February 21, 2026

குமரி: பிரபல கோயிலில் பட்டபகலில் கொள்ளை முயற்சி

image

குமரி மாவட்டம், இரணியல் மார்தாண்டேஸ்வரம் மஹாதேவர் கோயிலில் நேற்று பட்ட பகலில் துணிகர கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News February 21, 2026

குமரி: வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

குமரி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News February 21, 2026

குமரி மக்களே… புகார் எண்கள் அறிவித்தார் SP ஸ்டாலின்

image

குமரி மாவட்ட மக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க SP ஸ்டாலின் புகார் எண்கள் அறிவித்துள்ளார். அதில் புகார் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், காவல்துறை மக்கள் உறவை மேம்படுத்த ஆலோசனைகள், சட்டம் ஒழுங்கு, போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்களை 7708239100, 6385211224 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். இதில் புகார் செய்பவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். SHARE IT

News February 21, 2026

குமரி: அரசு பஸ் மோதி விபத்து

image

நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாண் ரோஸ் (65). இவர் நேற்று மார்த்தாண்டம் சந்தையின் முன்பு சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிலையம் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஜாண் ரோஸ் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!