India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி பகவதி அம்மன் கோயிலில் உள்ள 18 நிரந்தர உண்டியல்கள் நேற்று (ஜன.7) திறந்து எண்ணப்பட்டன. காலை 9 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 6 மணி வரை நடந்தது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டனர். இதில் ரூ.43,8,510 ரொக்கம், 23 கிராம் தங்கம், 294 கிராம் 500 மில்லி கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. இது தவிர வெளிநாட்டு பணங்களும் வசூல் ஆகி இருந்தன.
முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ. வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று (ஜன. 7) சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்துகொண்டு அவர்களின் உருவ படங்களை திறந்து வைத்து புகழ் அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் ( ஜன.10 ) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 10, +2,ஐடிஐ, டிப்ளமோ, மற்றும் கணினி பயிற்சி முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு <
வணிகர்கள் மகாஜன சங்க கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (6.1.2025) முதல் இரவு 11 மணிக்கு கடைகள் அடைக்க பட வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதை குமரி மாவட்ட வணிகர்கள் மகாஜன சங்கம் மனதார வரவேற்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் கேரள எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதால் இங்கும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரையிலும் HMPV வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என்று மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. *இருந்தாலும் SAFETY முக்கியம் மக்களே*
கன்னியாகுமரி மாவட்ட புதிய எஸ்பியாக ஸ்டாலின் நியமிக்கப்பட்டு பதவி பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவி பொறுப்பேற்ற பின்னர், இரவு நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சாதாரண உடையில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ரவுடிகள் நடமாட்டம், தேவை இல்லாமல் இரவு நேரங்களில் பொது இடங்களில் உலாவுவோர் போன்றவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் 15 லட்சத்து 84 ஆயிரத்து 362 வாக்காளர்கள் உள்ளனர்.வாக்காளர் பட்டியலில் இருந்து 9,102 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, 28,882 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 12,808 பேர். பெண் வாக்காளர்கள் 17,072 பேர். இதர வாக்காளர்கள் 2 பேர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று(ஜன.6) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். குளச்சல் மற்றும் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்து, குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில், “தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநர், அவரைக் காப்பாற்ற அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணி” என நாகர்கோவில் உட்பட பல்வேறு பகுதிகளில் #GetoutRavi என்று சுவரொட்டிகள் அச்சிட்டு ஒட்டியுள்ளனர். இவை அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது ‘டீ’ கடைகள் இரவு 11 மணிக்குமேல் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் இரவு 11 மணிக்கு மேல் செயல்படக்கூடாது என்று மாவட்ட காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.