Kanyakumari

News January 4, 2025

காதலனை கொன்ற குமரி மாணவி வழக்கில் தீர்ப்பு

image

கேரளா பாறசாலையை சேர்ந்தவர் ஷரோன் ராஜ், குமரி மாவட்டம் நெய்யூரில் கல்லூரியில் படித்து வந்தார். இவர் களியக்காவிளையை சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஸ்மா என்பவரை காதலித்து வந்தார். சாரோன் ராஜூவை 2022 ஆம் ஆண்டு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கிரீஸ்மா, அவரது தாயார் மற்றும் மாமா கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கேரளா நீதிமன்றத்தில் வரும் 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

News January 4, 2025

நாகர்கோவில் – காந்திதாம் ரயிலில் பெட்டிகள் மாற்றம்

image

நாகர்கோவில் – காந்தி தாம் -நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் 3 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகளுக்கு பதிலாக, 1 ஏசி மூன்றடுக்கு பெட்டி, 2 பொது இரண்டாம் வகுப்பு பட்டிகள் சேர்க்கப்படும். வருகிற மார்ச் 11ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. அதன்படி 1 ஏசி 2 டயர் கோச் , 6 ஏசி 3 டயர் கோச், 8 ஸ்லீப்பர் கிளாஸ், 6 ஜெனரல் செகண்ட் கிளாஸ், 1பேண்டரி கார், 1 செகண்ட் கிளாஸ் கோச், 1 லக்கேஜ் பெட்டி இருக்கும் என தெரிகிறது.

News January 4, 2025

குமரியில் கஞ்சா விற்பனையில் கடந்தாண்டு 218 பேர் கைது

image

குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தடுக்க மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கடந்த ஆண்டு கஞ்சா வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்ததாக 124 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 218 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும், 566 புகையிலை மற்றும் குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 578 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News January 4, 2025

1,600 ரவுடிகளிடம் நன்னடத்தை சான்றிதழ்

image

குமரி மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மாவட்டத்தில் சப் டிவிஷன் வாரியாக தனிப்படைகள் நியமிக்கப்பட்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில் ரவுடிகள் பட்டியலில் இருந்த சுமார் 1,600 பேரிடம் நன்னடத்தை சான்றிதழ் எழுதி வாங்கப்பட்டன என காவல்துறை தெரிவித்துள்ளது.

News January 4, 2025

கடந்தாண்டு கனரக வாகனங்களிடம் ரூ.2 கோடி வசூல்

image

குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு விபத்துகளை குறைக்கும் வகையில் டாராஸ் லாரிகள் கனரக வாகனங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. பகல் வேலைகளில் லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதனால் விபத்துக்கள் குறைந்துள்ளன. மாவட்டத்தில் அதிகபாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் 918 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.2 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

News January 4, 2025

திருவட்டாரில் பூனைக்காக அடிக்கப்பட்ட போஸ்டர் வைரல்

image

திருவட்டாரை சேர்ந்த ஒருவர் வளர்த்து வந்த 4 கிலோ எடை கொண்ட பூனையை ஜன.2ம் தேதி முதல் காணவில்லை என கூறப்படுகிறது. திருவட்டார் தபால் நிலையம் அருகில் வைத்து பூனை தவறியதாகவும், பூனையை கண்டு பிடித்துக்கொடுத்தால் ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும் என ‘QR’ கோடு, ‘YOUTUBE’ லிங்க் விவர போஸ்டர்கள் திருவட்டார் முழுக்க ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?

News January 4, 2025

குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 54 பேர் கைது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தின் கீழ் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் கஞ்சா வழக்கில் சிக்கிய அதிகம் பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News January 4, 2025

சென்னை – நாகர்., சிறப்பு ரயில்; நாளை முன்பதிவு தொடக்கம்

image

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கும், நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை(ஜன.5) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தென் மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். SHARE IT.

News January 4, 2025

கடந்தாண்டு போதையில் வாகனம் ஓட்டியவர்கள் டேட்டா

image

குமரி மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதிலும் குடிபோதையில் வாகனங்கள் ஒட்டியதாக 4988 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை நேற்று தெரிவித்துள்ளது. குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

News January 4, 2025

கண்புரை நோயாளிகளுக்கு இலவச லென்ஸ் பொருத்தும் முகாம்

image

குமரி ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊராட்சிகளில் கண்புரை நோயாளிகளுக்கு இலவச கண்லென்ஸ் பொருத்தும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று(ஜன.4) மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் சாணி PHC-யில் முகாம் நடக்கிறது. 6ம் தேதி கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் புத்தன் துறை PHC-லும், 23ம் தேதி தக்கலை ஊராட்சி ஒன்றியம் குமாரபுரம் PHC-லும், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் பிலாங்காலை PHC-லும் முகாம் நடக்கிறது.

error: Content is protected !!