India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திர மாநில அரசு வழங்குவதுபோல் உதவித்தொகை வழங்க வேண்டும், விண்ணப்பித்த ஒன்றரை வருடங்களாக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனே உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.21ஆம் தேதி காலை 10 மணிக்கு குமரி ஆட்சியர் அலுவலகம், தக்கலை தாலுகா அலுவலகம், கருங்கல் ராஜீவ் காந்தி சிலை உட்பட 6 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த மாற்றுத்தி றனாளிகள் முடிவு செய்துள்ளனர்.
குமரி சன் செட் பாய்ண்ட் கடற்கரை பகுதியில் நேற்று(ஜன.18) அதிகாலை அடுத்தடுத்து 2 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து சென்று அணைத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அதே கடற்கரை பகுதியில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைக்கும் படை வீரர்கள் போராடி அணைத்ததால் சீசன் கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பெரும் தீ விபத்தில் இருந்து தப்பின.
#இன்று(ஜன.19) காலை 10 மணிக்கு பெரியார் குறித்து அவதூறு பேசிய நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து காங்கரை சந்திப்பில் பெரியார் தொழிலாளர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#மாலை 6 மணிக்கு எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆரல்வாய்மொழி சந்திப்பில் நடக்கிறது. தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்கிறார்.#மாலை 6.30 மணிக்கு தேங்காய் பட்டணம் சந்திப்பில் தவ்ஹீத் ஜமாத் கூட்டம் நடைபெறுகிறது.
2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கிவழங்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் 22ஆம் தேதி நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற இருப்பதாக TNSTC CITU தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பாத சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்தால் பெற்றோருக்கு மூன்று ஆண்டு சிறை, ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர் மீது கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் மேற்கூறிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளது.
குமரி அருகே உள்ள கொட்டாரத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் ஆவார். இவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழாவையொட்டி நேற்று(ஜன.17) அரிசி, எள்ளு பருப்பு, பயறு, காணம் போன்ற நவதானியங்களை கொண்டு எம்.ஜி.ஆரின் உருவத்தை வடிவமைத்துள்ளார். நவதானியங்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
#இன்று(ஜன.18) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு ரப்பர் தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 47வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.#மாலை 6 மணிக்கு ஆரல்வாய்மொழி எம்ஜிஆர் நகர் சந்திப்பில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.# மாலை 6 மணிக்கு தக்கலையில் நாகூர் அனிபா நூற்றாண்டு விழா ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ பங்கேற்கிறார்.
கன்னியாகுமரி கடலில் கடந்த சில தினங்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. இன்றும்(ஜன.18) சூறைக்காற்று தொடர்ந்து வீசி வருவதால், குமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைந்தபின் போக்குவரத்து நடைபெறும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்கள் காரணமாக சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவர் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருவதால், நாகர்கோவில் மாநகராட்சியில் இந்த மாத கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், அடுத்த மாதம் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரிக்கு ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி ஜனவரி 26ம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரயில் சேவை தொடங்கப்படுவதன் மூலம் இந்தியாவின் வடபகுதியையும் தென்பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை அமையும் என்று ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர். SHARE IT.
Sorry, no posts matched your criteria.