Kanyakumari

News March 6, 2026

குமரி: கீழே விழுந்து தொழிலாளி பரிதாப பலி.!

image

புதுக்கடை அருகே தவிட்ட விளையை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 65). இவர் தனது மகள் சுஜாவின் வீட்டில் நின்ற புளிய மரத்தில் புளிப்பறிப்பதற்காக ஏறினார். அப்போது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 6, 2026

குமரி: SI உட்பட 21 போலீசார் இடமாற்றம்; SP உத்தரவு

image

சட்டமன்ற தேர்தலை ஒட்டி 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் ஏற்கனவே மாற்றப்பட்டனர். இந்நிலையில் மாவட்டத்தில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர், ஒரே நாளில் 21 பேரை இடமாற்றம் செய்து SP ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

News March 5, 2026

குமரி : வீடு, நில பத்திரம் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

image

கன்னியாகுமரி மக்களே, இங்<>கு க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 5, 2026

குமரி : 108 ஆம்புலன்ஸ் புக்கிங் செய்ய இனி Whatsapp..!

image

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

News March 5, 2026

குமரி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

image

குமரி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04546 – 255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 5, 2026

குமரி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப EASY..

image

குமரியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது இந்த <>லிங்க <<>>மூலம் செயலியில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்யவேண்டும். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும்.தகவலை SHARE பண்ணி உதவுங்க.

News March 5, 2026

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை குமரி வருகை

image

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (6ம் தேதி) குமரி மாவட்டம் வருகிறார். மாலை 4 மணிக்கு அவருக்கு நாகர்கோவிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. 5 மணிக்கு கல்லடி மாமூடு பகுதியில் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுடன் கலந்துரையாடுகிறார். 6 மணிக்கு குளச்சலில் கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார்.இரவு 7 இறச்சகுளம் பகுதியில் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் நெல்லை செல்கிறார்.

News March 5, 2026

நாகர்கோவிலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு..

image

நாகர்கோவில் மாநகராட்சித் துணைமேயர் மேரி பிரின்சி லதா, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைமையிடம் அவர் தனது மனுவை முறைப்படி வழங்கினார். மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றி வரும் அவர், தற்போது சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

News March 5, 2026

நாகர்கோவிலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு..

image

நாகர்கோவில் மாநகராட்சித் துணைமேயர் மேரி பிரின்சி லதா, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைமையிடம் அவர் தனது மனுவை முறைப்படி வழங்கினார். மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றி வரும் அவர், தற்போது சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

News March 5, 2026

குமரி: 300 பவுன் நகையை மோசடி செய்த இளைஞர்.!

image

கருங்கல் அருகே அடகு கடை நடத்தி வந்தவர் அகில். இவர் அந்த பகுதியை சேர்ந்த 75 நபர்களிடம் 300 சவரன் நகை வரை ஏமாற்றி உள்ளார். இது குறித்து பொதுமக்கள் அளித்த புகார் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக இருந்த அகிலை தேடி வந்தனர். இந்த நிலையில் அகிலை போலீசார் நேற்று கைது செய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!