India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு, குற்றங்கள் நடந்த இடங்களை பகுப்பாய்வு செய்து, அவை மீண்டும் நடைபெற வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புலன் விசாரணை அதிகாரிகள் தங்கள் தொழில்நுட்ப அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று(ஜன.22) காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குமரி மாவட்டம் குருந்தன் கோட்டை சேர்ந்தவர் சுரேஷ், 28. இவர் கடந்த 2 மாதமாக கோபிகா என்பவருடன் வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் கோபிகா அம்மா வீட்டிற்கு செல்ல முயன்றபோது அவரை செல்ல விடாமல் தடுக்க தனக்குத்தானே மண் எண்ணெய் ஊற்றி உடலில் தீ வைத்துகொண்டார். இதில் படுகாயமடைந்த சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று(ஜன.22) உயிரிழந்தார். வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
அகில இந்திய சித்த மருத்துவ கழகம் சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு மாநாடு குமரியில் இன்று(ஜன.23) தொடங்குகிறது. இந்த மாநாட்டை தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்கிறார். பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்குகிறார். 25ஆம் தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சித்த மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.
குமரி மாவட்டம் சுவாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமை பதி உள்ளது. இங்கு தை திருவிழா கடந்த 17ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 6வது நாள் நாளான நேற்று(ஜன.22) அய்யா வைகுண்டசுவாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான அய்யா வழி பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகர்கோவில் கோவை – நாகர்கோவில் பகல் நேர ரெயில் இரண்டு நாட்களுக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இம்மாதம் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் ஜங்ஷனில் இருந்து காலை 8:00 மணி புறப்படும் ரயில் விருதுநகர் கரூர் இடையே மாற்றுப் பாதையில் மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட காவல் துறை தொலைத்தொடர்பு பிரிவில் கழிவு செய்யப்பட்ட 197 மின்கலன்கள் (Batteries) உட்பட 1205 பொருட்கள் பொது ஏலத்தில் 06.02.2025 அன்று விடப்படுகிறது. மத்திய மாநில அரசுகளிடமிருந்து வழங்கப்பட்ட current Air pollution, water pollution certificates மற்றும் உரிமம் பெற்றவர்கள் மட்டும் அசல் உரிமத்தை காண்பித்து மின்கலன்களை ஏலம் எடுப்பதில் பங்கு பெறலாம் என மாவட்ட காவல்துறை இன்று தெரிவித்துள்ளது
குமரி மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு, மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு, சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் இம்மாதம் 25ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார். *share it*
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் கவிஞர் கவிமணியின் மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 92 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது இந்தப் பணிகள் நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் இந்த மணிமண்டபம் கட்டுவதற்கு 1,15,00000 ரூபாய் செலவில் திருத்திய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜன.21) சாலையில் சென்று கொண்டிருந்த கனிமவள லாரியின் பேரிங் பார்ட் உடைந்து விழுந்ததால் லாரி அங்கும் இங்குமாக அலசியது. இதையடுத்து ஓட்டுநர் சாமர்த்தியமாக லாரியை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டதை அடுத்து சாலையில் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை 2010ஆம் ஆண்டு முதல் இது வரை மாற்றுத்திறனாளிகள் 2,644 பேரும், 2006ஆம் ஆண்டு முதல் இதுவரை பொதுப்பிரிவில் 33,914 பேரும் என 16 ஆண்டுகளில் மொத்தம் 36,558 பேர் உதவித்தொகை பெற்றுள்ளனர். 2025ஆம் ஆண்டுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி நாள் 31.3.2025 ஆகும் என அதிகாரிகள் நேற்று கூறினர்.
Sorry, no posts matched your criteria.