India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளில் அவரது தியாகத்தினை நினைவு கூர்ந்து போற்றுவோம். தேசத்தின் விடுதலைக்காகவும் நமது நாட்டை ஒருங்கிணைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றும் சரித்திர தாளில் பதிக்கப்பட்டிருக்கும் என காந்தியடிகள் நினைவு நாளான இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று கூறியதாவது, குமரி மாவட்டம் சிற்றாறு அணை-2 மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை மீன் பண்ணையை புதுப்பித்து உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 25 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்த்து, அவை அணைகள் மற்றும் குளங்களில் வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நாளை(ஜன.31) தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாமை கன்னியாகுமரியில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். 90 நாட்களுக்கு மீனவர் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. கடற் படையில் சேருதல் உள்ளிட்ட வேலை வாய்ப்புக்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
#இன்று(ஜன.30) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க கேட்டும், மத்திய அரசின் இஎஸ்ஐ காப்பீடு திட்டத்தில் தொழிலாளர்களை சேர்க்க கேட்டும் 57வது நாளாக கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டம்.#காலை 10:30 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை பிரச்சனை தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து மகாசபை ஆர்ப்பாட்டம்.
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5 அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று(29/01/25) டெல்லியில் உள்ள மங்கல்புரி பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் வீடு வீடாக சென்று பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக, தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் குமரி மாவட்ட பாஜக மகளிர் அணி தலைவர் சத்யா ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக வெற்றி கழகம் சார்பில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக மாதவன் (எ) ஐயப்பன் இன்று தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் அவர்களை சந்தித்து வாழ்த்து அளித்துக் கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 412 காவலர்களை இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்களில் 171 பேர் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 223 பேர் தலைமை காவலர்கள் 18 பேர் முதல் நிலை காவலர்கள் ஆவார்கள். இடம் மாற்றம் தொடர்பாக அண்மையில் எஸ்.பி ஸ்டாலின் காவலர்களை நேரில் சந்தித்து கருத்துக்கள் கேட்டு அறிந்தார். அதன் அடிப்படையில் இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
ஜனவரி முதல் தேதி முதல் கடந்த 25- ம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிவேகமாக சென்றது, அதிக பாரத்துடன் சென்றது, வரிகட்டாதது, ஹெல்மெட் இல்லாமல் சென்றது, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணித்தது என என பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறி இயங்கியதாக 20,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் வரும் நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீதான் நடவடிக்கைகள் தொடரும் என நேற்று கூறினர்
அமெரிக்கா ChatGPT, Copilot, MetaAI, Grok, Gemini என்றும், சீனா Deepseek என்றும் அறிவு வளர்ச்சியில் கொடிகட்டி பறக்கிறது. இந்தியா மோடி ஆட்சியில் கோமியத்திற்கும், கும்பமேளாவிற்கும் வாட்சப் யூனிவர்சிட்டியில் விளக்கம் தேடிக் கொண்டிருக்கிறது என தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான மனோ தங்கராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபகுமார் நேற்று(ஜன.28) குமரியில் மிக சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டார்.
Sorry, no posts matched your criteria.