Kanyakumari

News February 2, 2025

குமரி : குளங்களில் வண்டல் மண் எடுக்க இலவச அனுமதி

image

மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று (பிப்-1) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.”குமரிமாவட்டத்தில் மண்பாண்டம் செய்பவர்கள், விவசாயம் செய்பவர்கள் ஏரி, குளங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான கிராவல் மண், களிமண், வண்டல் மண்மண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துக்கொள்ள இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பயனடையலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

News February 2, 2025

20 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து – குமரி பெண் பலி

image

நேற்று முன்தினம் ஜன-31.ம் தேதி இரவு சென்னையில் இருந்து மார்த்தாண்டம் ஆம்னி பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது.நேற்று (பிப்.1) அதிகாலை திருச்சி, துவரங்குறிச்சி அருகே வரும் போது திடீரென பஸ் சாலையோர மின் கம்பத்தில் மோதி பஸ் தீ பிடித்தது. இதில் 15 பேர் படுகாயமடைந்தனர். இதில் மணப்பாறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட களியக்காவிளையைச்சேர்ந்த புஷ்பம்(62) என்பவர் இறந்துபோனார். துவரங்குறிச்சி போலீசார் விசாரணை.

News February 1, 2025

இஸ்ரோ தலைவர் பாராட்டு விழாவில் அமைச்சர் பங்கேற்பு

image

குமரி மாவட்டம் மேலக்காட்டு விளையை சேர்ந்த நாராயணன் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஊர் மக்கள் சார்பில் பாராட்டு விழா நாளை நடைபெறுகிறது. இதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் நாளை (பிப் 2) மேலக்காட்டு விளை வருகிறார். இந்த விழாவில் தமிழக நிதி அமைச்சரும் குமரி பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு கலந்து கொள்கிறார். இந்த விழாவில் ஆட்சியர் அழகு மீனா, எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்கிறார்கள்.

News February 1, 2025

பட்ஜெட் குறித்து குமரி எம்.பி அறிக்கை 

image

குமரி எம்.பி விஜய் வசந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் இந்த பட்ஜெட்டில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது; தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை; சில மாநிலங்களுக்கு மட்டும் நிதி மற்றும் திட்டங்களை அளித்து மத்திய அரசு மற்றான் தாய் மனப்பான்மையோடு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது” என எம்பி தெரிவித்துள்ளார்.

News February 1, 2025

குமரி : இஸ்ரோ தலைவருக்கு பாராட்டு விழா

image

இந்திய விண்வெளி துறையின் செயலாளராகவும் மற்றும் இஸ்ரோவின் தலைவராகவும் பொறுப்பேற்று இருக்கும் கன்னியாகுமரி மண்ணின் மைந்தர் வ.நாராயணனுக்கு நாளை (பி.2) ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணி அளவில் அவரது சொந்த ஊரான மேலகாட்டுவிளையில் வைத்து பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News February 1, 2025

குமரி – பனாரஸ் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

image

ரயில் எண் 06163 குமரி – பனாரஸ் சிறப்பு ரயில், 2025-ஆம் ஆண்டு (பிப்.17) தேதி கன்னியாகுமரியில் இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு, நான்காம் நாள் காலை 7:15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறு மார்க்கத்தில் ரயில் எண் 06164 பனாரஸ் – கன்னியாகுமரி சிறப்பு ரயில், 2025-ஆம் ஆண்டு (பிப்.23 ) பனாரஸில் மாலை 7:05 மணிக்கு புறப்பட்டு, நான்காம் நாள் அதிகாலை 2:45 மணி கன்னியாகுமரி வந்தடையும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

News February 1, 2025

கோட்டாறு வக்பு உரிமை மீட்பு மாநாடு நடக்கிறது

image

SDPI கட்சி கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக வஃக்பு உரிமை மீட்பு மாநாடு இம்மாதம் 23ஆம் தேதி (2025) அன்று கோட்டாரில் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி மாநாடு தொடர்பான லோகோ இன்று வெளியிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் சுல்பிகர் அலி மற்றும் நிர்வாகிகள் லோகோவை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் எச்டிபிஐ கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

News February 1, 2025

ரயில்களில் போதைப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க ஐ.ஜி. உத்தரவு

image

ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. ஈஸ்வரராவ் இன்று நாகர்கோவில் வந்தார். நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் அவர் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

News February 1, 2025

வண்டல் மண் எடுக்க விண்ணப்பம் -ஆட்சியர் 

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டைகளில் இருந்து பொதுமக்கள்ஷ, மண்பாண்டம் செய்பவர்கள், விவசாயிகள் விவசாய தேவைகளுக்காக இலவசமாக வண்டல் மண், களிமண் கிராவல் மண் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்; இதற்கு இணையதளத்தில் விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம்” என கூறியுள்ளார்.

News February 1, 2025

குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 12 பேர் மீது நடவடிக்கை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றி வந்த இரண்டு கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 12 பேர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி ஸ்டாலின் இன்று தெரிவித்தார்.

error: Content is protected !!