India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; மினி பஸ்களுக்கான புதிய விரிவான திட்டம் 2024ன்படி புதிய வழித்த டங்கள் கண்டறியப்பட்டும்,புதிய மற்றும் தற்போது இயக்கப்பட்டு வரும் சிற்றுந்துகளுக்கு புலம்பெயர்தல் தொடர்பான விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப்.28ம் தேதி கடைசி நாள் ஆகும் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தலைக்கவசம் அணியாது இருத்தல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது உட்பட மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 1-ந் தேதி முதல் 21 தேதி வரை 11 ஆயிரத்து 157 பேர் மீது வழக்குகள் பதிவாகி உள்ளது.
குமரி மாவட்ட காவல் மானியவிலை பல்பொருள் அங்காடியில் பணிபுரிய விருப்பமுள்ள பணியிலிருக்கும்/ஓய்வு பெற்ற காவலரின் குடும்ப அங்கத்தினர் (துணையருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது)ஒரு நபர் மட்டும் ரூ15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) மாதம் ஒன்றிற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் 25.02.2025-க்குள் மாவட்ட காவல் அலுவலக G”பிரிவில் விண்ணப்பம் செய்யலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
குமரி, காந்தி மண்டபம் அருகே நேற்று நிறுத்தப்பட்டிருந்த பைக்கை, 2 பேர் திருடிச் சென்றனர். இதை கண்ட மக்கள் அவர்களை விரட்டினர். குண்டல் என்ற பகுதிக்கு சென்றபோது, பைக்கில் பெட்ரோல் தீர்ந்ததால் அங்கே நிறுத்திவிட்டு, திருடர்கள் பெட்ரோல் வாங்கி வந்தனர். அங்கு காத்திருந்த மக்கள், இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து, குமரி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின்
இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குமரி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜான் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் நிதி இலக்கு பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்று அவர் கூறியுள்ளார்.
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா வரும் மார்ச் 2ஆம் தேதி காலை 7.21 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் திருகொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா நாட்களில் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி, சந்தனக் குட ஊர்வலம் போன்றவைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
#இன்று(பிப்.22) காலை 10 மணிக்கு ஒழுகினசேரி பெரியார் மையத்தில் திராவிடர் கழக ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.#காலை 10:30 மணிக்கு நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டுள்ள SC,ST(POA) Act 1989 Trial Hall-ஐ சென்னை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி ஸ்ரீராம் திறந்து வைக்கிறார்.#மாலை 5.30 மணிக்கு எஸ்எல்பி மேல்நிலைப் பள்ளியில் 6வது புத்தகக் கண்காட்சி நடக்கிறது.
நாகர்கோவிலில் இன்று(பிப்.22) நடைபெறவுள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீராம் கார் மூலம் இன்று காலை குமரி வந்தார். அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த தலைமை நீதிபதி ஸ்ரீராமுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் குமரி மாவட்ட நீதிபதிகள் பலர் பங்கேற்றனர்.
நாகர்கோவில் ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து, கேரள மாநிலம் மூணாறு பகுதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 2 மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த திங்கள்சந்தை – மாங்குழி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஆதிகா வீட்டிற்கு குமரி ஆட்சியர் அழகு மீனா நேற்று(பிப்.21) நேரில் சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.
குமரி மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று பத்மநாபபுரம் பகுதியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 2 நாட்கள் இதே பகுதியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.