Kanyakumari

News February 25, 2025

குமரியில் கனரக வாகனங்களுக்கு தடை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெறும் இரண்டு நாட்களும் (பிப். 25,26) களரக வாகனங்களுக்கு தடை கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி இடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிவாலய ஓட்டம் நடைபெறும் இரண்டு நாட்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டனர் இதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜா மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

News February 25, 2025

அனைத்து நாட்களிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும்

image

கடந்தாண்டு அக்.31ஆம் தேதிக்குள் வரி செலுத்த தவறியவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சொத்து வரியுடன் ஒரு சதவீதம் வட்டி தொகை மாதந்தோறும் வசூலிக்கப்படும். அனைத்து வரிகளையும் செலுத்த மார்ச்.31ஆம் தேதி வரை அவகாசம். கணினி வரி வசூல் மையங்கள் அனைத்து நாட்களிலும் செயல்படும் என்றும் நாகர்கோவில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி தொகையினை உடனடியாக செலுத்தும் படி மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. *ஷேர்

News February 25, 2025

குமரியில் திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்து

image

தவக்காலத்தை யொட்டி குமரியில் உள்ள புகழ்பெற்ற கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, ராஜாவூர் உள்பட 17 கிறித்துவ திருத்தலங்களுக்கு திருப்பயணம் செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 5-ந்தேதி முதல் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ் தினமும் காலை 6-30 மணிக்கு வடசேரியில் இருந்து புறப்பட்டு மீனாட்சிபுரம் வழியாக சென்று இரவு 7-15 மணிக்கு குளச்சல் புதூர் திருத்தலத்தை சென்றடைகிறது.

News February 25, 2025

கன்னியாகுமரியில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நடப்பாண்டுக்கான முதல் கோடை மழை பிப்.28 அன்று தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிப்.28 முதல் மார்ச்.2 வரை 3 நாட்களுக்கு நெல்லை, விருதுநகர், குமரி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, தேனி, சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 25, 2025

மாதா அமிர்தானந்த மயி தேவி குமரிக்கு வருகை!

image

குமரி மாவட்டம் சேவாபாரதி அமைப்பு சார்பாக “கர்மயோகினி சங்கமம்” நிகழ்ச்சி நாகர்கோவில் இறச்சகுளம் பகுதியில் அமைந்துள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் மார்ச்-2 நடைபெற உள்ளது. இந்த கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சத்குரு மாதா அமிர்தானந்த மயி தேவி ஆசியுரை வழங்க உள்ளார்.

News February 24, 2025

குமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறும் பாதை!

image

மகா சிவராத்திரியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 கோவில்களை இணைத்து சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. முன் சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கும் இந்த சிவாலய ஓட்டம் தீக்குறிச்சி, திற்பரப்பு திருநந்திக்கரை, பொன்மனை, பண்ணிப் பாகம், கல்குளம், திருமேலாங்கோடு திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்ணிக்கோடு வழியாக நட்டாரத்தில் முடிவடைகிறது.

News February 24, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(பிப்.24) காலை 10 மணிக்கு குடிநீர் மற்றும் தெருவிளக்குகள் வசதி செய்யக்கோரி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு தொழிலாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தி ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கோணம் தொழிலாளர் நல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News February 24, 2025

குமரியில் கையில் விசிறியோடு 110 கி.மீ. ஓடும் சிவ பக்தர்கள்!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி சிவ பக்தர்கள் 12 கோவில்களுக்கு 110 கி.மீட்டர் தூரம் ஓடிச்சென்று சிவபெருமானை வழிபடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்சிறை சிவன் கோவிலில் இருந்து தொடங்கும் இந்த ஓட்டம் நட்டாரத்தில் முடிவடைகிறது. சிவ பக்தர்கள் இந்த கோவில்களுக்கு கையில் விசிறி கொண்டு வீசியபடி கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்வர்.

News February 23, 2025

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பதிவான வெப்பநிலை விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் பகல் நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ,(AWS, IMD,TAWN , PWS) station report; நாகர்கோவில்-38°C,பத்மநாபபுரம்-36°C,பேச்சிபாறை-35°C,கன்னியாகுமரி-34°C,மேல்புறம்-34°C,குழித்துறை-33°C,கிள்ளியூர்-32°C,நெய்யூர்-31°C என்னும் அளவில் வெப்பநிலை  பதிவாகி இருந்தது.

News February 23, 2025

போக்சோவில் மதபோதகர் குடும்பத்துடன் கைது

image

செம்பருத்திவிளையை சேர்ந்தவர் ஜான் ரோஸ். இவர் செம்பருத்திவிளையில் ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜெபக்கூடத்திற்கு பிரார்த்தனைக்காக சென்ற சிறுமியை ஜான் ரோஸ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதில் ஜான்ரோஸ் அவரது மனைவி ஜெலின் பிரபா, அவரது மகன் பிரதீப் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!