India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் மேனகா. இவரது தாய் நமது குமரி மாவட்டத்தில் உள்ள திக்குறிச்சியை சார்ந்தவர். பிறந்ததும் குமரியே. இவரது மகள் தான் தற்போது இந்திய சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ். மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தமிழில் உச்சம் தொட்டு, தற்போது பாலிவுட்டில் அடி எடுத்து வைத்த கீர்த்தி நம்ம ஊரு என்பதில் நமக்கு சந்தோசம் தானே மக்களே! *நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்க
குமரியில் கன்னிப்பு கும்ப பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி விவசாயிகள் உள்ளனர். அணைகளில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் நாளை (பிப்.28) மூடப்படுகிறது. மேலும் அணைகளை மூட பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், அணை திறப்பை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் 25-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று(27ம் தேதி) வரை விடிய விடிய பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் பங்கு பெற்று வருகின்றனர். இந்த சிவாலய ஓட்டம் இன்று மாலை வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கு பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், குமரி மாவட்ட குளங்களில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண் எடுப்பதற்கு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். விவசாய தேவைகளுக்காக ஓர் ஏக்கருக்கு நஞ்சை நிலமாக இருந்தால் 73 கன மீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கன மீட்டரும் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.
வாரத்தில் 3 நாள் இயங்கும் தாம்பரம் – நாகர்கோவில் விரைவு ரயிலில் ஜூன் மாதம் 19ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டியும், 2 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், 2 தூங்கும் வசதி பெட்டியும், ஒரு முன்பதிவு இல்லாத பொது பெட்டியும் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த இந்த ராயல் 23 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2, பிளஸ் 1 விடைத்தாள்கள் திருத்தும் மையமாக நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளியும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் கருங்கல் பெத்தலகம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு முடிய முடிய விடைத்தாள்கள் பாதுகாப்புடன் இம்மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகாசிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று(பிப்.25) வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கோயம்புத்தூர் விமான நிலையத்தில் வைத்து கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். அவருடன் பலர் கலந்து கொண்டனர்.
முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் தரிசனம் செய்து விட்டு நேற்று(பிப்.25) சிவாயல ஓட்டம் தொடங்கியது.
குமரி அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில், சிறப்பு பூஜையுடன் விழா ஆரம்பித்தது.
முன்சிறை திருமலை மகாதேவர் கோயில் தொடங்கி திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில் வரை 12 சிவாலயங்களுக்கும் ‘கோவிந்தா கோபாலா’ கோஷத்துடன் ஓடிச்சென்று பக்தர்கள் வழிபடுகின்றனர்.
12 சிவாலயங்களை ஓட்டமாக ஓடி தரிசிக்கும் சிவாலய ஓட்டம் குமரியில் புகழ்பெற்றது. 12 கோயில்களில் உள்ள சிவனை உரிய நேரத்தில் தரிசிக்கவே இந்த ஓட்டம். ‘ஹரியும் ஹரனும்’ ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்த கிருஷ்ணர் நடத்திய திருவிளையாடலே சிவலாய ஓட்டம் வரக் காரணமானது. சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை முன்சிறையில் தொடங்கும் ஓட்டம் ‘கோவிந்தா கோபாலா’ கோஷத்துடன் 110 கி.மீ. கடந்து சுசீந்திரத்தில் நிறைவடைகிறது.
குமரி மாவட்டத்தில் பிப்ரவரி-25, 26 சிவாலய ஓட்டம் நடைபெறுவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க அந்த இரண்டு நாட்கள் குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வகையில் குமரி மாவட்டத்தில் பிப்ரவரி-25, 26 டாரஸ் லாரிகள் ஓடுவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.