India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் +2 தேர்வு நேற்று(மார்ச் 3) தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள 85 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. மொத்தம் 22,461 மாணவ மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 21,777 மாணவ மாணவிகள் மட்டுமே நேற்று நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டனர். 684 மாணவ மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. அவர்கள் ஏன் தேர்வு எழுத வரவில்லை என்பது குறித்து பள்ளி ஆசிரியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 5ம் தேதி குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில், பல்வேறு முன்னனி நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைக்கு ஆட்கள் எடுக்கின்றனர். குறிப்பாக TATA பவர் நிறுவனம் 50-60 நபர்களை எடுக்கின்றனர். விருப்பமுள்ளவர்கள் <
கடையால் மூடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன். குலசேகரம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடியில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை வேறு ஒருவர் பணிக்கு சோதனை சாவடிக்கு வந்த போது சோதனை சாவடி திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் உடலில் காயங்களுடன் செல்லப்பன் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரில் குலசேகரம் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கோவிலுக்கு வரும் தமிழக மற்றும் கேரள பக்தர்கள் கடற்கரைக்கு செல்வது வழக்கம். சிலர் கால்நனைத்து விட்டும், சிலர் குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வர். இதனை ஒட்டி கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிகளை போலீசார் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று முதல் +2 தேர்வு நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இன்று தொடங்கும் பொதுத்தேர்வு எழுத தயாராக உள்ள மாணவ செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கடின உழைப்பு, வெற்றியாக மாற வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவில் 10 நாள் கொடை விழா நேற்று(மார்ச் 2) தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் திருவிழாவையொட்டி கோவில் பகுதியில் 9,000 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் மண்டைக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்.
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் அவதார தின விழா நாளை நடைபெற இருக்கிறது. இதனையொட்டி நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் இன்று இரவு நாகர்கோவில் வருகிறார்கள். நாளை காலை நாகர்கோவில் நாகராஜர் திடலில் இருந்து சுவாமி தோப்புக்கு அவதார தின விழா ஊர்வலம் நடக்கிறது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு ‘அய்யா ஹர ஹர..அய்யா சிவ சிவ’ என பாடியவராறு செல்வர்.
#இன்று(மார்ச் 3) காலை 9 மணிக்கு கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் தனித்துறையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காந்தி மண்டபம் முன்பிருந்து சென்னை கோட்டை வரை பிரச்சாரப் பயணம் தொடங்குகிறது.#பிற்பகல் 3 மணிக்கு குளச்சல், மணவாளக்குறிச்சி, இரணியல் உட்பட 7 இடங்களில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு காவடி புறப்பட்டு செல்கிறது.#காலை 9 மணிக்கு வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் திருவிழா தொடங்குகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் +2 தேர்வு இன்று (மார்ச்.03) தொடங்குகிறது. இந்த தேர்வை 22 ஆயிரத்து 461 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதிலும் 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது மாணவர்கள் காப்பியடிப்பதை தவிர்க்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டம் முழுவதிலும் பள்ளிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
“குமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இணையம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் நேற்று (1.3.2025) ஏணியை இடமாற்றம் செய்யும் போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.