India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குலசேகரம்புதூரை சேர்ந்த சுரேஷின் மனைவி சந்தனகுமாரி(34) ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுகிறார். கணவன், மனைவியிடையே நேற்று முன்தினம் வாய்த்தகராறு ஏற்பட்டபோது அங்கு வந்த சுரேஷின் தம்பி முருகன் ,”ஏன் அண்ணனிடம் சண்டை போடுகிறீர்கள்?” என சந்தனகுமாரியிடம் கேட்டுள்ளார். உடனே முருகனை, சந்தனகுமாரி கத்தியால் குத்தியதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மக்களே மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 – 36 வயதுக்குட்பட்டவர்கள், <

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி -|| (தொகுதி II மற்றும் IIA) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு செப்.28 அன்று நடைபெற உள்ளது. மேற்படி தேர்வில் குமரி மாவட்டத்தில், அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்கு உட்பட்ட 31 தேர்வுக்கூடங்கள் மற்றும் விளவங்கோடு வட்டத்திற்கு14 தேர்வுக்கூடங்களில் 13,225 தேர்வர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். அதில் ஆகஸ்ட் மாதம் மட்டும் சாலை விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் – நீரோடி வரையிலான கடல் பகுதியில் 16 முதல் 18 வினாடிகளுக்கு ஒருமுறை 1.1 முதல் 9.3 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய கடல்சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது கள்ளக் கடலாக இருக்கும் என்பதால் கடலோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குமரி கடலோரப் பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி ஆட்சியர் அழகு மீனா மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை மற்றும் வேளாண்மை, வணிகத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் மணக்குடி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் புது வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வீடுகளை விரைந்து முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வருகிற 10.10.2025-ந்தேதிக்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி வேண்டி விண்ணப்பிப்பவர்கள், மனை வரைபடம். கடை அமையவிருக்கும் இடத்தின் வரைபடம். போன்ற விபரங்களை இணைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குமரி மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

குமரி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
Sorry, no posts matched your criteria.