Kanyakumari

News March 6, 2025

தேசிய அளவில் குமரி மாணவிகள் சாதனை!

image

கன்னியாகுமரி மாவட்டம், கோவளம் பகுதியை சேர்ந்த மாணவிகள் ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் குழு படகு ஓட்டுதல் போட்டியில்(Asmita rowing league) வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். அவர்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அந்த ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

News March 6, 2025

குமரியில் 263 மாணவர்கள் +1 தேர்வு எழுதவில்லை!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று +1 தேர்வு தொடங்கியது. 22 ஆயிரத்து 15 மாணவ மாணவிகள் தேர்வு எழுத பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு விபரங்கள் அனுப்பப்பட்டிருந்த நிலையில், 22 ஆயிரத்து 38 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுதினர். 263 தேர்வு எழுதவில்லை. அவர்கள் தேர்வு எழுத வராததற்கான காரணம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News March 6, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 5) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தையல் நல வாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பணம் பலன்களை உயர்த்தி வழங்க கேட்டு தையல் கலைஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 11 மணிக்கு மணலோடை அரசு ரப்பர் தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்க கேட்டு மணலோடை ரப்பர் கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News March 6, 2025

‘மும்மொழி கல்வி எங்கள் உரிமை’ கையெழுத்திட்ட Ex. MP

image

தமிழகம் முழுவதும், மும்மொழிக் கொள்கைக்கு பொதுமக்களிடையே இருக்கும் ஆதரவைத் திமுக அரசுக்கு உணர்த்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சென்னையில் நேற்று(மார்ச் 5) ‘மும்மொழி கல்வி எங்கள் உரிமை’ எனும் கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கையெழுத்திட்டார்.

News March 6, 2025

நாகர்கோவில் ரயிலில் வந்த உதவி லோகோ பைலட் உயிரிழப்பு

image

திப்ருகரில் இருந்து கன்னியாகுமரிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று(மார்ச் 5) இரவு 11.50 மணிக்கு வந்தது. இந்த ரயில் பயணிகளை இறக்கி விட்டு சுத்தம் செய்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தபோது, அந்த ரயிலில் இருந்த உதவி லோகோ பைலட் பிரதீப் மயங்கிய விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்து போனார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 6, 2025

குமரியில் நாளைய மழை குறித்த முன்னறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இருதிசை காற்று முறிவு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதனை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும். குறிப்பாக ஒருநூறாம்வயல், கல்லார், ஆறுகாணி ,பத்துகாணி, மணலோடை ஆகிய மலையோர அடிவார பகுதிகளிலும் நாளை பிற்பகலுக்கு பிறகு மாலை நேரத்தில் உருவாகி மழை பொழியும் வாய்ப்பு உள்ளது என்று தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News March 5, 2025

பத்மநாபபுரம் மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு

image

பத்மநாபப்புரம் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளின் குறை தீர்க்கும் முகாம் சப் கலெக்டர் தலைமையில் 18. ம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு பத்மனாபபுரம் உதவி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் வட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்ளலாம் என இன்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.* நண்பர்களுக்கு பகிரவும்*

News March 5, 2025

குமரி மாவட்ட காவல் துறையின் அறிவிப்பு

image

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக ” x ” பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று ஏமாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; மேலும் ஏஜென்ட்கள் குறித்து சந்தேகம் இருப்பின் 7010363178 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிர்ந்து விழிப்படைய செய்யுங்கள்*

News March 5, 2025

குமரி மாவட்ட மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு!

image

நாகர்கோவில் போக்குவரத்து கழக மண்டலம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்,“குமரி மாவட்ட மக்கள் ₹ 1000 செலுத்தி ( குளிர்சாதன வசதி தவிர ) ஒரு மாதத்திற்கு மாவட்டம் முழுவதிலும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யலாம்; இந்த பயண சீட்டை வடசேரி, நாகர்கோவில், திங்கள் சந்தை, மார்த்தாண்டம் ஆகிய பேருந்துநிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்*

News March 5, 2025

குமரி கல்வி அதிகாரிகளுக்கு சிறை தண்டனை!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காத கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர் மோகன் ஆகியோருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று(மார்ச் 5) பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

error: Content is protected !!