Kanyakumari

News March 7, 2025

முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் முகாம்

image

முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 17ஆம் தேதி காலை 9.00 மணியளவில் நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உரிய விண்ணப்பமாக இரட்டை பிரதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் அழகு மீனா இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 7, 2025

சுட்டெரிக்கும் வெயில்: வெறிச்சோடி காணப்படும் குமரி 

image

குமரியில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. தெருக்களில் அனல் காற்று வீசுகிறது. இதனால் சர்வதேச சுற்றுலாதலமான குமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இன்று(மார்ச் 7) குமரி கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வெயில் தாக்கத்தினால் குளிர்பானங்களின் விலையும் கிடுகிடுவென உயந்துள்ளது.

News March 7, 2025

குமரி அரசுப் பள்ளிகளில் இதுவரை 767 பேர் சேர்ப்பு!

image

குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அரசு சார்பில் கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அவர்கள் எடுத்துக் கூறி மாணவர்கள் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த 6 நாட்களில் 767 மாணவ மாணவியர் புதிதாக நுழைவு நிலை வகுப்புகளில் சேர்ந்துள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 7, 2025

குருவாயூர் எக்ஸ்பிரஸ்: சென்னை – தாம்பரம் இடையே ரத்து

image

சென்னை எழும்பூர் பிரிவில் தண்டவாள பணிகள் நடைபெறுவதால் இவ்வழித்தட ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் எண் 16127 சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து மார்ச் 9ஆம் தேதி காலை 10.20 மணிக்கு புறப்படுவது, தாம்பரத்தில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் சென்னை எழும்பூர்-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

News March 7, 2025

குமரியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

image

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மார்ச் 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆயவு மையம் கணித்துள்ளது. 10ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SHARE IT.

News March 7, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 7) காலை 10 மணிக்கு பணியாளர்களுக்கு ரூ.730 தினக்கூலி வழங்க கேட்டு குளச்சல் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்.#மாலை 5 மணிக்கு பூதப்பாண்டி உதவி ஆய்வாளரை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பூதப்பாண்டி ஜீவா திடலில் ஆர்ப்பாட்டம்.#மாலை 5.30 மணிக்கு வங்கியில் போதுமான பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி நாகர்கோவில் ஐஓபி வங்கி முன்பு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

News March 7, 2025

குமரி TO மும்பை சிறப்பு ரயில் ஜூன் வரை நீடிப்பு!

image

மும்பையில் இருந்து குமரிக்கும், குமரியில் இருந்து மும்பைக்கும் வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மும்பையில் இருந்து திங்கள் & புதன்கிழமையும், கன்னியாகுமரியில் இருந்து வியாழன் & சனிக்கிழமையும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ரயில் சேவை ஜூன் மாதம் இறுதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. SHARE IT.

News March 6, 2025

குமரி நீலகண்ட சாமி கோவில் தலபுராணம்

image

பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவில் 12 சிவாலயங்களில் 7வது சிவாலயம் ஆகும். வேணாட்டரசர்கள் இங்கே இருந்த போது, தறி கேட்டு ஓடிய குதிரை ஒன்று கோவில் இருக்கும் இடத்திற்கு வந்து அடைப்பட்டு நின்றதாம். அரசன் குதிரை நின்ற இடத்தில் சுயம்புவான லிங்கத்தை கண்டு, அங்கு கோவில் கட்டியதாக தலபுராணம் கூறுகிறது. ஆனந்தவல்லி அம்மனுக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது. 2 கொடி மரங்கள் இந்த கோவிலில் உள்ளன.

News March 6, 2025

விவேகானந்தர் பாறைக்கு செல்ல 3 புதிய படகுகள் -அமைச்சர் 

image

குமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகிறார்கள். தற்போது அங்கு 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட மூன்று புதிய படகுகள் வாங்கப்பட இருப்பதாக தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு சென்னையில் நேற்று சென்னையில் தெரிவித்தார்.

News March 6, 2025

குமரி மாவட்டத்தில் 3 பேருந்துகளுக்கு ஒரே எண்

image

குமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் 3 பேருந்துகளுக்கு ஒரே எண் வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் மூன்று பேருந்துகளின் படங்களுடன் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பழைய பேருந்துகள் மாற்றிவிட்டு புதிய பேருந்துகளுக்கு பழைய பேருந்துகளின் எண்கள் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. *இது குறித்த உங்கள் கருத்தை ஜாலியா கமெண்ட்ல சொல்லுங்க*

error: Content is protected !!