India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குழித்துறை பிரவீன் (34) சமீபத்தில் புதுக்கோட்டையில் ஒரு ஆட்டோவை திருடியுள்ளார். பின் திருச்சியில் ஒருவரிடம் செல்போன் பறிக்க முயன்றபோது அவரை திருச்சி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கு வைத்து காது வலிப்பதாக கூறிய பிரவீனை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தபோது, பாதுகாப்பு காவலரை தள்ளி விட்டு அவர் தப்பி ஓடினார். பிரவீன் மீது பல கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது

குமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ குமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04652-291744
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 0462-2572689
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

குமரி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 28க்குள் (இன்று) <

முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்த குமரி எம்.பி. விஜய் வசந்த், குமரி மாவட்டத்தில் மண் எடுப்பதற்கு தடை உள்ள காரணத்தால் அண்டை மாவட்டத்தில் இருந்து 4 வழி சாலை பணிகள் மற்றும் ரயில் இரட்டிப்பு பணிகளுக்கு மண் கொண்டு வரப்படுகிறது. ஆனால் தற்பொழுது மண் தட்டுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மண் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குமரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <

நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஒரு லாட்ஜ் ஒன்றில் நேற்று காலையில் ஒரு அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. சம்பவ இடத்திற்கு வந்து போலீசார், அறையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த வாலிபரை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நெல்லை கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த கார்த்திக் (35) என்பதும், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

களியக்காவிளை காவல் நிலையத்திற்கு உட்பட்ட படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் சத்யதாஸ் (57), இவரது வீட்டில் அரசு டாஸ்மாக் கடையில் இருந்து மதுபானம் வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக, களியக்காவிளை போலீசாருக்கு நேற்று 27-ம் தேதி கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் அவரது வீட்டில் இருந்த 50 பாட்டில் மதுபானங்களை பறிமுதல் செய்து சத்தியதாஸை கைது செய்தனர்.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2025-2026 இரண்டாம் அரையாண்டு சொத்துவரியினை அக்டோபர் 31 தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் ஊக்கத்தொகையாக 5% அதிகபட்சமாக ரூ.5000 வழங்கப்படும். மேலும், சொத்துவரி, காலிமனைவரி, தொழில் வரி, குடிநீர்கட்டணம் மற்றும் கடை வாடகை முதலியவைகள் Gpay, phonepay, போன்ற அனைத்து UPI APP வழியாகவும் செலுத்தலாம்.

தாம்பரம் நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இம்மாதம் 28ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் இந்தரயில் மதியம் 12. 30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் திங்கட்கிழமை மதியம் 3:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில்மறுநாள் காலை 5.15 மணிக்கு நாகர்கோவில்வந்து சேரும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

குமரியில் இந்திய அஞ்சல் துறையில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் Post Office வேலை நிச்சயம்
1.துறை: இந்திய அஞ்சல் துறை
2.தேர்வு கிடையாது
3.கல்வி தகுதி: 10th Pass
4.வயது வரம்பு : 18 முதல் 40 வரை
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6.சம்பளம்: ரூ.10,000- 29,380 வரை
7.கடைசி தேதி: 30.09.2025
சொந்த ஊரில் போஸ்ட் ஆபீஸ் வேலைக்கு Apply பண்ணுங்க! SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.