Kanyakumari

News March 16, 2025

நாகர்கோவில் வருகிறார் நடிகர் வடிவேலு!

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் வருமான வரித்துறை அலுவலகத்தில் மார்ச் 19ஆம் தேதி வருமான வரி சேவை மையம் தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில் திரைப்பட நடிகர் வைகை புயல் வடிவேலு கலந்துகொண்டு திறந்து வைக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வருமான வரி உதவி ஆணையர் வேணுகுமார் தலைமையில் வருமான வரி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.*வடிவேலு ரசிகர்களுக்கு பகிரவும்*

News March 16, 2025

குமரி மாவட்டத்திற்கு வந்தடைந்த புதிய பேருந்துகள்

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலத்திற்கு இந்த ஆண்டு 77 புதிய டவுன் பேருந்துகளும், 9 புதிய மப்சல் பேருந்துகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 19 பேருந்துகள் குமரி மாவட்டத்தை வந்தடைந்துள்ளன. இந்த புதிய பேருந்துகளை எந்தெந்த பகுதிகளில் இயக்குவது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஓரிரு வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 16, 2025

“நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டம் அறிவிப்பு

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு சமூக பங்களிப்பு மற்றும் நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை பெற “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” பெயரில் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் பணியில் இணைந்து பங்களிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News March 16, 2025

கொச்சுவேலி ரயில் நேரம் மாற்றம் – பயணிகள் மகிழ்ச்சி

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பில் இருந்து திருவனந்தபுரம் கொச்சுவேலி செல்லும் பயணிகள் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 8:10 மணிக்கு கிளம்பி வந்த ரயில் நேற்று முதல் 7:55 மணிக்கு கிளம்பி திருவனந்தபுரம் 10:25க்கு சென்றடைகிறது. இதனால் திருவனந்தபுரத்திற்கு பல்வேறு பணிகளுக்கு செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News March 16, 2025

குமரி மாவட்டத்தில் 2வது கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணி

image

குமரி மாவட்டத்தில் நீர்வாழ் பறவைகள் மற்றும் வனப்பகுதியில் உள்ள பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிமேற்கொள்ளப்பட்டது. கடந்த 9ஆம் தேதி நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நிலையில் இன்று வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. உத்திர பாஞ்சான், தெற்கு மலை உதயகிரி கோட்டை மருந்து வாழ் மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

News March 16, 2025

கன்னியாகுமரி: இந்திய ராணுவத்தில் சேர விருப்பமா?

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே ‘<>க்ளிக்<<>>’ செய்து விண்ணப்பிக்கலாம். தென்காசி, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்கள், நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 16, 2025

கிராம சபை கூட்டம் தேதி மாற்றம்: ஆட்சி தலைவர் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் 22.03.2025 அன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கிராம சபை கூட்டம் ஆனது 23.03.2025 அன்று காலை 11 மணியளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வார்டுகளில் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும் என்று குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

News March 16, 2025

குமரி சுகாதார மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

image

குமரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மருத்துவ அலுவலர் 5, செவிலியர் 5, பல்நோக்கு சுகாதார பணியாளர் 5, மருத்துவமனை பணியாளர் 5 என 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுடையவர்கள் மார்ச் 24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். *தேவைபடுவோருக்கு பகிரவும்* 

News March 16, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

image

#குமரியில் இன்று(மார்ச் 16) பிற்பகல் 2 மணிக்கு கல்வி மற்றும் கலை துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வடசேரியில் பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் விருது வழங்கும் விழா நடக்கிறது.#பிற்பகல் 2.30 மணிக்கு தெற்குச் சூரங்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழா மாட்டு வண்டி போட்டி நடக்கிறது.#மாலை 6 மணிக்கு தேவ சகாயம் மூன்று காற்றாடி மலை புனித வியாகுல அன்னை ஆலய திருவிழாவையொட்டி சப்பரம் பவனி நடக்கிறது.

News March 15, 2025

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குமரி வருகை

image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் மார்ச் 31 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐ ஜி எஸ்.ஆர்.சரவணன் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை மற்றும் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். குஜராத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணி 31ஆம் தேதி குமரியில் முடிவடைகிறது இதனை வரவேற்க அமித்ஷா வருகை தர உள்ளார்.

error: Content is protected !!