Kanyakumari

News March 18, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#குமரியில் இன்று(மார்ச் 17) காலை 10 மணிக்கு EPF பென்ஷன் குறைந்தபட்சம் 5,000 வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மத்தூர் சங்கம் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#மாலை 4 மணிக்கு பத்திர பதிவுத்துறையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து மார்த்தாண்டம் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News March 18, 2025

மக்கள் கூடும் பகுதிகளில் தண்ணீர் பந்தல் – குமரியில் உத்தரவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து ஓஆர்எஸ் தண்ணீர் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், வெப்ப அலைகளின் தாக்கம் குறித்து ஆட்டோக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News March 17, 2025

குமரி: எரித்துக் கொல்லப்பட்டவரின் அடையாளம் தெரிந்தது

image

குமரி அருகே உள்ள லீபுரம் பாட்டுக்குளம் கரையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? என்ற விவரம் தெரியாமல் இருந்து வந்தது இந்த நிலையில் அவர் யார் என்று அடையாளம் தெரிந்து உள்ளது. அவர் சிவகாசி விளாம்பட்டியை சேர்ந்தவர் என்றும் கொத்தனார் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News March 17, 2025

கன்னியாகுமரி வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

image

தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த மாதம்(ஏப்ரல்) முதல் வாரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். குமரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சுற்றுப்பயண விவரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2025

குமரி: உணவு, தங்கும் இடத்துடன் பயிற்சி வகுப்பு!

image

ஆதிதிராவிடர், பழங்குடியினர் & பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில்(JEE Mains) தேர்ச்சி பெற பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது. உணவு, தங்குமிடம் & பயிற்சிக்கான 11 மாத செலவை CPCL நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். www.tahdco.com தளத்தில் பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம் என ஆட்சியர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. SHARE IT.

News March 17, 2025

அரசுப் பள்ளிக்கு நிதி உதவி: குமரி கலெக்டர் அறிவுறுத்தல்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று(மார்ச் 16) வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, குமரியில் அரசு பள்ளிகளின் மேம்பாடு மற்றும் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு உதவிடும் வகையில் ‘நம்ம ஊரு நம்ம ஸ்கூல்’ குழுவை தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி இணையதளம் வாயிலாக மட்டுமே அளிக்கப்பட வேண்டும். இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2025

குமரியில் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு!

image

தமிழகத்தில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 22ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று(மார்ச் 17) மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE IT.

News March 17, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#குமரியில் இன்று(மார்ச் 17) காலை 9 மணிக்கு அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு மருத்துவமனைக்கு மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி 96வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு தேசிய ஊரகத் தொழிலாளர்களுக்கான ஐந்து மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

News March 17, 2025

சட்ட விரோதமாக பணியாற்றிய வங்கதேசத்தவர் கைது

image

குமரி அருகே இடைக்கோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கு வங்காளதேசத்தை சேர்ந்த சித்திக்(32 ) என்ற இளைஞர் போலி ஆவணங்களுடன் சட்ட விரோதமாக பணிபுரிந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்து, ஆவணங்களை ஆய்வு செய்தனர். அவரிடம் இருந்த ஆவணத்தில் அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்.

News March 16, 2025

குமரியில் வேலை வாய்ப்பு முகாம்!

image

வசந்த் அண்ட் கோ சார்பில் ஒவ்வொரு வருடமும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம் வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெறுகிறது. இளைஞர்கள் இதில் ஏராளமாக பங்கேற்று பயனடைய வேண்டும் என வசந்த் அண்ட் கோ தலைவர் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!