Kanyakumari

News March 14, 2025

குமரிக்கு பட்ஜெட் அறிவிப்பு

image

▶️ திருவள்ளுவர் சிலை கண்ணாடி இழைப் பாலத்தை பார்வையிட சின்னமுட்டம் துறைமுகத்தை இரண்டாவது முனையமாக கொண்டு ரூ.2722 கோடியில் திருவள்ளுவர் சிலை வரை பயணிகள் படகுகள் இயக்கப்படும்.

▶️ கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் தேவையை நிறைவு செய்ய பணிகள் மேற்கொள்ளப்படும்.

▶️ மீன் இறங்குதளம், மீன்பிடி வலைகள் பின்னுதல் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும்.

News March 14, 2025

குமரியில் 17 காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குமரியில் ஒப்பந்த அடிப்படையில் ஆயுஷ் சித்த மருத்துவ அலுவலர் 2 பணியிடங்கள், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் 1 பணியிடம், கவுன்சிலர் 1 பணியிடம், மருந்தாளுநர் 1 பணியிடம், பல்நோக்கு பணியாளர் 7 பணியிடங்கள் உட்பட 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு இம்மாதம் 27ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். 

News March 14, 2025

அரசு பள்ளியில் மாணவரை சேர்த்தால் தங்க மோதிரம் 

image

திருவட்டார் அருகே மலைவிளை அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து இந்த பள்ளியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதன்படி இந்த ஆண்டு அரசு பள்ளியில் சேரும் மாணவ மாணவிகளுக்கு தங்க மோதிரம் வழங்குவது, வாகன வசதி ஏற்படுத்துவதாக வெளியிட்ட துண்டுபிரசுரம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

News March 14, 2025

குமரியில் 13 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் 

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் துணைத் தாசில்தார்கள் நிலையில் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீதித்துறை பயிற்சி நிறைவு பெற்ற 8 துணை தாசில்தார் களான மீனாகுமாரி,துர்கா ரவீந்திரன், பாஞ்சாலி ஆறுமுகம் மகேஷ் மாரியப்பன் உட்பட 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று பிறப்பித்தார்.

News March 14, 2025

மகளின் கழுத்தை அறுத்த தாய் மீது வழக்கு

image

நெய்யூரைச் சேர்ந்தவர் விஜிலின் சாம் (44). இவர் மனைவி மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். இந்நிலையில் அவர் அவரது மகள் விஜோலின் தீபா கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இரணியல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 13, 2025

குமரியில் டாட்டூ குத்திய 6 பேருக்கு எச். ஐ.வி பாதிப்பு

image

குமரி மாவட்டத்தில் டாட்டூ எனும் பச்சை குத்துவதால் தோல் நோய்கள் அதிகரித்துள்ளது என்றும் கடந்த 2 ஆண்டுகளில் 6 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் மாதம் 30 பேர் டாட்டூவினால் ஏற்படும் பிரச்சனைக்காக வருகின்றனர் என ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையின் தோல் நோய் மருத்துவ பிரிவு பேராசிரியர் பிரேம் சாந்த் தெரிவித்துள்ளார்.*தெரிந்தவர்களுக்கு பகீர்ந்து உஷார் படுத்தவும்*

News March 13, 2025

நாகர்கோவில்: 52 வார்டுகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு!

image

நாகர்கோவில் மாநகரில் 52 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் செவிலியர், சமூக ஆர்வலர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், மகளிர் சுய உதவி குழுவினர் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஆகியோர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

குமரி: 95 ஊராட்சிகளில் மார்ச் 22-ல் கிராம சபை கூட்டம்!

image

குமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் இம்மாதம் 22ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மழை நீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், நிலத்தடி நீரைச் செறிவூட்டுதல், தண்ணீர் மாசுபாட்டை தடுத்தல், நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News March 13, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 13) காலை 10 மணிக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு திருக்கோவில் பணியாளர்களுக்கு அரசு ஆணைப்படி ஊதிய நிர்ணயம் செய்து வழங்க நிர்வாகத்தை கண்டித்து சுசீந்திரம் திருக்கோவில் அலுவலகம் முன்பு தொடர் தர்ணா போராட்டம் நடக்கிறது.

News March 13, 2025

காட்டு மாடு தாக்கி குமரியை சேர்ந்த வன ஊழியர் உயிரிழப்பு!

image

கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு ஊராட்சி, கூவக்காட்டுமலை பகுதியை சேர்ந்த அசோக்குமார் கோவை மாவட்டத்தில் வனத்துறை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது காட்டுமாடு தாக்கி உயிரிழந்தார். அசோக்குமார் உடல் வனத்துறையினர் மரியாதை செலுத்திய பின்னர் நேற்று(மார்ச் 12) சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

error: Content is protected !!