India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், தொகுதி முகவரி மாற்றம், ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்தல் போன்றவைகளுக்கான சிறப்பு முகாம் இம்மாதம் 16, 17, 23 மற்றும் 24 தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று (அக்.31) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பாக நாகர்கோவிலில் இருந்து ஈரோட்டுக்கு மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக சிறப்பு பேருந்து 3ஆம் தேதி அன்று இரவு 7 மற்றும் 8 மணிக்கு இரண்டு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் நேற்று (அக்.31) தெரிவித்துள்ளது.
*காலை 9 மணிக்கு நாகர்கோவில் நேசமணி மணிமண்டபத்தில் மார்ஷல் நேசமணி சிலைக்கு மேயர் முன்னிலையில் கலெக்டர் மாலை அணிவித்தல் *மாலை 5 மணிக்கு தக்கலை லெஷ்மி திருமண மண்டபத்தில் இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் ”தமிழ்நாடு 68″ விழா.*இரவு 7 மணிக்கு திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் 2ஆம் நாள் விழாவில் திருவாதிரைக்களி, 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், 10 மணிக்கு கதகளி.
குமரி மாவட்டத்தில் புதிதாக 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 1698 வாக்குச்சாவடிகள் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 1702 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியிலும் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதியிலும் தலா இரண்டு வாக்குச்சாவடிகள் வீதம் 4 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில், நாளை (01.11.2024) காலை 9.00 மணிக்கு நாகர்கோவில் நேசமணி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் முதல் தேதியை நினைவு கூறும் வகையில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணியின் மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதியில் செல்வோர் பார்த்து ரசித்து ரசித்து செல்கின்றனர். நாளை காலை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் இங்குள்ள நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரிகளால் சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. இன்று மாலை வலியாற்றுமுகம் பகுதியில் வந்து கொண்டிருந்த கனிமவள லாரி எதிரே வந்த சொகுசு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில்”ஆவினில் விரைவில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.10 மதிப்புள்ள பாதாம் பவுடர், ரூ.10க்கான சிறிய அளவு தயிர் பாக்கெட் அறிமுகப்படுத்தப்படும். மேலும் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆவின் பால் பொருட்கள் விநியோகம் செய்ய மொத்த, சில்லறை விற்பனையாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். விரும்பும் நபர்கள் குமரி ஆவின் ஒன்றியத்தில் விண்ணப்பிக்கலாம்” என்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றி செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து வாகன விதிமுறை மீறல் தொடர்பாக 1767 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்றும் போலீஸ் சோதனை தொடர்கிறது.
குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா தீபாவளி தினமான இன்று (அக்.31) சத்தியவாணி அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பக குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடினார். குழந்தைகளிடம் தீபாவளியின் சிறப்பு குறித்து பேசியவர் குழந்தைகளிடம் அவர்களின் படிப்பு, பிடித்த விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார். குழந்தைகள் ஆட்சியரின் கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்தனர்.
Sorry, no posts matched your criteria.