Kanyakumari

News January 15, 2026

குமரி: இளம்பெண் கர்ப்பம்; என்ஜினீயர் கைது

image

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அபிஷ். வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த பெண் நடன கலைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்த நிலையில் அபிஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக அபிஷ் மீது அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அபிஷை கைது செய்தனர்.

News January 15, 2026

குமரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000…!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT

News January 15, 2026

குமரியில் பெண் தூக்கிட்டு தற்கொலை..!

image

குமரி மாவட்டம், தென்தாமரைகுளம் அருகே தேரிவிளையை சேர்ந்தவர் பொன்தங்கம் (42). இவர் இழுப்பு நோயினால் அவதிப்பட்டு வந்தார். மேலும், திருமணம் ஆகாமல் இருந்து வந்த அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீசார் நேற்று (ஜன.14) வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 15, 2026

குமரியில் காலை முதலே படகு சேவைகள் தொடக்கம்

image

பொங்கல் பண்டிகை மற்றும் சபரிமலையில் நேற்று (ஜன.14) மகர விளக்கு தெரிந்ததை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் உட்பட ஏராளமானவர்கள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் இன்று காலை 6 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கியுள்ளது. மேலும், மாலை 5 மணி வரையிலும் தொடர்ந்து பட போக்குவரத்து நடைபெறும். இன்று முதல் மூன்று நாட்களுக்கு இது நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 15, 2026

குமரி: இன்சூரன்ஸ் ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை

image

ஏற்றக்கோடு பகுதியை சேர்ந்தவர் தோமஸ் (58). தனியார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நேற்று (ஜன.14) போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 15, 2026

குமரி: NO EXAM… போஸ்ட் ஆபீஸில் வேலை ரெடி..!

image

குமரி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 15, 2026

குமரி: பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

image

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் அஸ்வின். தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர் நேற்று முன் தினம் மாலை நண்பருடன் பைக்கில் சென்றார். அப்போது கொல்லங்கோடு பகுதியில் சென்ற போது எதிரே வந்த கூண்டு வாகனம் பைக் மீது மோதியது. இதில் காயமடைந்த அஸ்வின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 14, 2026

குமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (14.01.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

News January 14, 2026

குமரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

குமரி மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

குமரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

குமரி மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!