India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 66 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தம் 6,356 யூனிட் ரத்தம் புறப்பட்டு உள்ளதாக ரத்த வங்கி மருத்துவர் ராகேஷ் நேற்று தெரிவித்துள்ளார். இது 350 மில்லி லிட்டர் ஆகும். ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இருந்து மட்டும் குழித்துறை, பத்மநாபபுரம் மற்றும் பூதப்பாண்டி ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு ஓராண்டில் 773 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின் படி நேற்று சிறப்பு வாகன போக்குவரத்து சோதனை நடத்தப்பட்டது. இதில் விதிமுறை மீறல், ஹெல்மட் அணியாமல் வருதல் போன்ற நடவடிக்கைகளுக்காக ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.1,84,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டது.

காவல் துறை கண்காணிப்பாளர் -4652220167
வனத்துறை அலுவலர் -4652276205
வருவாய் அலுவலர் -9445000930
சார் நிலை ஆட்சியர் -9445000483
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் -9942352624
ஆதி திராவிட நலத்துறை அலுவலர் -7338801260
மண்டல மேலாளர், நுகர்பொருள் வாணிப கழகம் -4652260224
மேற்பார்வை பொறியாளர், மின்சார வாரியம் -4652230011
துணை இயக்குனர், விவசாயம் -4652275391
கோட்டாட்சியர் , நாகர்கோவில் -9445000482 *SHARE

”புற்றுநோய் இல்லா குமரி மாவட்டம்” என்னும் இலக்கிற்காக முதற்கட்ட களப்பணிகள் பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட காட்டாத்துறை ஊராட்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் முதல் புற்றுநோய் கண்டறிதல் மருத்துவ முகாம் காட்டாத்துறை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஜன.16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே, இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

திங்கள்சந்தை அருகே வாடிவிளையைச் சேர்ந்தவர் மேரி ஜெனட்(50). இவர் அந்தப் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் தலையில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக டிசம்பர் மாதத்தில், விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருதல் போன்ற வகையில் சிறப்பான காவல் நிலையமாக வடசேரி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக நேற்று (ஜன.13) மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் வடசேரி காவல் நிலைய அதிகாரிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.

குமரி மக்களே, உங்க வங்கில Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
உங்க வாட்ஸ் ஆப்-ல் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜன.15 முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சுற்றுலா மையங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் கன்னியாகுமரி, திற்பரப்பு அருவி, லெமூர் கடற்கரை, சொத்த விளை, சங்குத்துறை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மற்றும் பொது இடங்களில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குமரி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. <
Sorry, no posts matched your criteria.