Kanyakumari

News January 16, 2026

குமரி: EMI-ல கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

image

குமரி மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து ‘தமிழ்நாடு Hypothecation Termination’ தேர்ந்தெடுங்க. பின்னர் வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க. அதனை சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News January 16, 2026

குமரி: கணவன், மனைவி சம்பவ இடத்தில் பலி

image

கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தெலுங்கானாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்களான கணவன், மனைவி இருவரும் நேற்று இரவு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குமரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News January 16, 2026

குமரி மருத்துவக் கல்லூரிக்கு 5 பிரிவுகளில் விருது

image

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறந்த முறையில் செயல்பட்டதற்காக குழந்தைகள் நலப்பிரிவு, பொது அறுவை சிகிச்சை துறை ஆகிய இரண்டிலும் தெற்கு மண்டல பிரிவில் முதலிடம் கிடைத்துள்ளது. மேலும், மகளிர் மற்றும் மகப்பேறு துறையில் இரண்டாம் இடமும், பொது மருத்துவத் துறையில் இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று (ஜன.15) பாராட்டு தெரிவித்துள்ளார்.

News January 16, 2026

குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

image

குமரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>CLICK <<>>செய்து மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவலுக்கு: 94987 94987 அழையுங்க. இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 16, 2026

குமரி: பொங்கல் கொண்டாட்டத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

image

நாகர்கோவில் அருகே சரலூரில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழா கலை நிகழ்ச்சியில் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் நிகழ்ச்சிகளை ரத்து செய்து அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் ரமேஷ் என்பவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். மணிகண்டன் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கோட்டாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News January 16, 2026

குமரி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY NOW!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <>கிளிக் <<>>செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 16, 2026

குமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

(15.01.2026) கன்னியாகுமரி மாவட்ட இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

News January 15, 2026

குமரி: மக்களே.. இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>eservices.tn.gov.in<<>> என்ற தளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். SHARE பண்ணுங்க.

News January 15, 2026

குமரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

குமரி மாவட்ட ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க.

News January 15, 2026

குமரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

குமரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!