Kanyakumari

News January 28, 2026

குமரி : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

குமரி மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க..!

News January 28, 2026

குமரியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

புதுக்கடை அருகே மணியாரங்குன்று பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கடந்த 2 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி வந்தார். இந்நிலையில் அவரது மனைவி நேற்று வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தபோது ஜெயக்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 28, 2026

குமரி: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.

1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.

2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க

3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.

4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.

இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

News January 28, 2026

மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நாளை மறுநாள் ஜன.30 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் அரசு துறைகளால் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை மீனவர்கள் வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

குமரி: கஞ்சா விற்ற இளைஞர் கைது

image

கொல்லங்கோடு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுஜின் தலைமையிலான போலீசார் சூசைபுரம் பகுதியில் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த சூசைபுரம் பகுதியை சோ்ந்த பேனியோ (20) என்ற இளைஞரை சோதனை செய்தனர். அதில் அவர் சிறுவா்களுக்கு விற்பனை செய்வதற்காக 50 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

News January 28, 2026

குமரி: ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை !APPLY NOW

image

குமரி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

குமரியில் கேரளா வியாபாரி பலி

image

திருவனந்தபுரம் அருகே மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (78). இவர் மரத்தினாலான சிறு பொருட்களை குமரிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென கன்னியாகுமரிக்கு வந்த அவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக குமரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 27, 2026

குமரி: பழைய வாகனம் வாங்கும் போது இது அவசியம் – எஸ்.பி

image

குற்ற சம்பவங்களில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க பயன்படுத்திய வாகனங்களை(Second Hand) வாங்கும்போதும், விற்கும்போதும் ஆவணங்களில் பெயர் மாற்றம் அவசியம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பயன்படுத்திய வாகனங்கள் வாங்கும் போது 14 நாட்களுக்குள் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் சட்ட மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் என தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!