Kanyakumari

News January 29, 2026

குமரி: திருட்டு வழக்கில் இளைஞர் கைது

image

தக்கலை அருகே Ex.ராணுவ வீரர் வீட்டில் கடந்த ஆண்டு 29 பவுன் நகை காணாமல் போனது. இந்த புகாரில் போலீசார் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர். ஆனால், திருடு போன நகைகள் முழுவதும் கிடைக்காமல் இருந்ததால் போலீசார் தொடர் விசாரணை செய்தனர். அதில் சிறையில் இருந்த சுழிசுரேஷ் 18 பவுன் நகைகளை மறைத்து வைத்தது தெரிந்தது. இதையடுத்து தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

News January 29, 2026

குமரி: மின் ஊழியருக்கு அரிவாள் வெட்டு

image

தொழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். இவர் பள்ளியாடி துணை மின் நிலைய ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று உழக்கண் விளையை சேர்ந்த ஒரு வீட்டில் மின் பழுதை சரி செய்யச் சென்றுள்ளார். அப்போது சுவரில் ஏறி நின்று மின் வயரை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒருவர் சுவரில் இருந்து இறங்க கூறி அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.

News January 29, 2026

குமரி: ரூ.93,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி! APPLY NOW

image

குமரி மக்களே, யூகோ வங்கியில் காலியாக உள்ள 173 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA முடித்தவர்கள் பிப். 2ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 93,960 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து உதவுங்க..

News January 29, 2026

குமரி: நகை கொள்ளை வழக்கில் அதிரடி தீர்ப்பு

image

குமரி, அழகன்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 1999ம் ஆண்டு 23.517 கிலோ நகை கொள்ளை போனது. இதுதொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 4 பேர் இறந்து விட்ட நிலையில் மற்றவர்கள் மீதான வழக்கில் இரணியல் கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேருக்கு தலா 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஒருவருக்கு 3 வருட தண்டனையும் விதித்தார்.

News January 29, 2026

குமரியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

image

குமரி உபமின் நிலையத்தில் நாளை (ஜன.30) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், வாரியூர், தேரூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், புதுகிராமம், காக்காமூர் மற்றும அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT

News January 29, 2026

குமரியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

image

குமரி உபமின் நிலையத்தில் நாளை (ஜன.30) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், வாரியூர், தேரூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், புதுகிராமம், காக்காமூர் மற்றும அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT

News January 28, 2026

குமரியில் இன்றைய இரவு காவல் ரோந்து அதிகாரிகள்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, இன்றைய (28.01.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News January 28, 2026

குமரி: ரேஷன் கடை வரிசையில் நிற்க வேண்டாம்!

image

குமரி மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 28, 2026

குமரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்!

image

குமரியில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News January 28, 2026

குமரி: தோட்டத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

image

ராஜாக்கமங்கலம் போலீஸ் சரகம், கார்த்திகை வடலி என்ற இடத்தில் குளத்தின் கரையில் உள்ள தென்னந்தோட்டத்தில் ஒருவர் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை செய்யப்பட்டவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது தெரியவில்லை. ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!