Kanyakumari

News January 30, 2026

குமரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

குமரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News January 30, 2026

குமரி: பெற்றோரை கொலை செய்ய முயற்சி; மகனுக்கு தண்டனை

image

குலசேகரம் பகுதியை சேர்ந்தவர்கள் சிங்கராயன்-சபரிபாய் தம்பதியினர். இவர்களது மகன் மைக்கேல்தாசன் தனது பெயருக்கு வீட்டை மாற்றகோரி தகராறில் ஈடுபட்டு தனது பெற்றோரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் மைக்கேல்தாசன் மீது போலீசார் வழக்கு பதிந்த நிலையில் இந்த வழக்கு நாகா்கோவில் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் மைக்கேல்தாசனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News January 30, 2026

நாகர்கோவில்: டெம்போ டிரைவர் வெட்டி கொலை

image

நாகர்கோவில் அருகே ஒரு தென்னந்தோப்பில் ஜன.28 அன்று ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த டெம்போ டிரைவர் கண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கொன்றது யார்? ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில் 2 சிறுவர்கள் உள்பட 21 வயது இளைஞர் கண்ணனை கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

News January 29, 2026

குமரி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

குமரி மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News January 29, 2026

குமரி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல தேவையில்லை!

image

குமரி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>aservices.t police.gov.in என்ற<<>> இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

பிப்.1-ல் மதுக்கடைகள் இயங்காது – கலெக்டர்

image

வடலுார் இராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பிப்.1 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள், FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News January 29, 2026

குமரி: டெம்போ கவிழ்ந்து விபத்து

image

மருங்கூர் – இரவிபுதூர் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்த டெம்போ கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்தது. விபத்தில் டெம்போ டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர். டெம்போவில் இருந்த செங்கல் லோடு வயலில் சிதறியது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. மேலும், இந்தப் பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருவதால் சாலை மற்றும் வயல் ஓரம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை.

News January 29, 2026

குமரி: Spam Calls-க்கு இனி END CARD

image

குமரி மாவட்ட மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!