India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்டம், மேக்கா மண்டபத்தைச் சேர்ந்தவர் ராஜா மனோகர் (66). இவர் தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு ஆட்டோவில் வந்து இறங்கி வீட்டிற்கு செல்ல சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பைக் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா மனோகர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குளச்சல் அருகே 17 வயது சிறுமிக்கும், ஈசன்தங்கு பகுதியை சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞருக்கும் ஜன.28 அன்று பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதுகுறித்து மாவட்ட சமூகநல அலுவலருக்கு தகவல் கிடைத்ததையடுத்து குளச்சல் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக சிறுமியை திருமணம் செய்த சுபாஷ், சிறுமியின் தாயார் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குமரி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, இன்றைய (31.01.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு<
2. அட்டை பிறழ்வுகள்-ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும் SHARE பண்ணுங்க.

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

குமரி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இங்கு<

காஞ்சிரம்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ மணிகண்டன். இவர் சாங்கை பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் என இருவர் வந்துள்ளனர். இருவரும் நகை வாங்குவது போல் நடித்து மூன்று கிராம் மோதிரம் மற்றும் கம்மலை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதித்தபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தான் கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு மனு அளித்துள்ளார். மனு தொடர்பாக தோவாளை இளநிலை பொறியாளரை நேரிலும், போனிலும் தொடர்பு கொண்ட போது மின் பொறியாளார் பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஆட்சியரிடம் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரி இளநிலை பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

குமரி மாவட்டத்தில் நாளை முதல் பிப்.14ம் தேதி வரை கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் கால்நடை பராமரிப்புத் துறையினரால் மேற்கொள்ளப்படும் என்று குமரி ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.