Kanchipuram

News February 22, 2026

காஞ்சிபுரம் : அரசு சேவைகள் இனி Whatsapp-இல்!

image

காஞ்சிபுரம் மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 22, 2026

காஞ்சிபுரம் : CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News February 22, 2026

காஞ்சிபுரம்: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை!

image

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில்<> TamilNilam Geo-Info <<>>என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share பண்ணுங்க.

News February 22, 2026

காஞ்சிபுரத்தில் காவல்துறை அதிரடி!

image

திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் லாரியில் இருந்து வேனுக்கு மாற்றப்பட்ட 2.5 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த கனகலிங்கம் (39) மற்றும் அவரது நண்பர் குமார் (36) ஆகியோரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கனகலிங்கம் சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

News February 22, 2026

காஞ்சிபுரத்தில் துடி துடித்து பலி!

image

கும்பகோணத்தைச் சேர்ந்த அனுசுயா (23), கூடுவாஞ்சேரியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். கணவர் ராஜதுரையுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த அவர், செட்டிபுண்ணியம் அருகே மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 21, 2026

காஞ்சிபுரம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 21, 2026

காஞ்சி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

காஞ்சிபுரம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

▶️ விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
▶️ அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
▶️ விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News February 21, 2026

காஞ்சி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

காஞ்சிபுரம் மக்களே ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். *உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க*

News February 21, 2026

காஞ்சி: லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

காஞ்சிபுரம் மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 044-27237139 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 21, 2026

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

image

ஶ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில் இன்று (பிப்.21) பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஶ்ரீ லலிதா திரிபுரசுந்தரி அம்பிகை பொரித்த கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற உள்ளது.

error: Content is protected !!