India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக சட்டசபை கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக கவர்னர் ரவியை கண்டித்து, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே தெற்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று (ஜன.7) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், எம்.பி. செல்வம், மாநகர செயலர் தமிழ்ச்செல்வன், மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட 1,000 பேர் பங்கேற்றனர். இக்கூட்டம் காரணமாக, காமராஜர் சாலையில் சுமை ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று (ஜன.7) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் காவலான் கேட் பகுதியில் மறியல் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போலீசார், உடனடியாக அவர்களை கைது செய்தனா்.
‘சி கேப்’ அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கங்கள் இணைந்து நடத்திய கைப்பந்து போட்டியில், முதல் பரிசு பெற்ற காஞ்சிபுரம் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் சிறப்பு நிலை மாணவிகள் முதல் பரிசு வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இன்று நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோ.சாந்தி பங்கேற்றார்.
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appல் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தாலுகாக்களுக்கு செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கில்<
காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் பள்ளி மாணவர்-மாணவிகள், பொது பிரிவினர், பெண்களுக்கான தனிப்பிரிவு சதுரங்க போட்டி வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. வெற்றி பெறும் மாணவர்-மாணவிகள் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் விளையாட அனுப்பப்பட உள்ளனர். மேலும், விபரங்களுக்கு 99942 93081, 95002 34581 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காஞ்சி சதுரங்க செயலர் ஜோதிபிரகாசம் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,81,710 ஆகும். இதில், ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,70,932, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,10,561, இதர வாக்காளர்கள் எண்ணிக்கை 217 ஆகும். இன்று முதல் தொடர் திருத்தம் நடைபெறுவதால் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான திருத்தங்களை மனு மூலமாகவும், இணையதளம் (Voters.ecl.gov.in) வாயிலாகவும் பதிவு செய்து பயன் பெறலாம். ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (06.01.2025) மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கழகம் இணைந்து நடத்திய, பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தில், AUDIO BOOK FOR VISUALLY IMPAIRED கருவியை வடிவமைத்து மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கோவிந்தவாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ/மாணவியரை வாழ்த்தி ரூ.10,000/-க்கான காசோலையை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025க்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட, சார்- ஆட்சியர் ஆஷிக் அலி, பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இருந்தனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் 185ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் சென்னை பல்லாவரம் பகுதியில் அமைந்துள்ள பாபா சாகேப் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில், திருமதி.ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டார். காஞ்சிபுரம் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கே. பிரபாகரன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். உடன் காஞ்சிபுரம் நிர்வாகிகள் இருந்தனர்.
காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், மத்திய அரசு சார்பில், ரூ.70 கோடி மதிப்பில், பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், பெரும்பாலான பணிகள் முடிக்காமல் இழுபறியாக உள்ளன. இதில், 41 நிலுவை பணிகளுக்கு தற்போது ‘டெண்டர்’ விடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில், வளர்ச்சி பணிகளை முடிக்க மின்வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.