Kanchipuram

News January 7, 2026

BREAKING: ஸ்ரீபெரம்பத்தூரில் கடைகள் இழுத்து மூடல்

image

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி இயங்கிய குடோன்களுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது. கைவல்யம் நகரில் செயல்பட்டு வந்த குடோன்கள், ஆலைகளால் காற்று, ஒலி மாசு ஏற்படுவதாக மக்கள் புகார் அளித்ததில் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதிகாரிகள் வழங்கிய நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்கப்படாததால் குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

காஞ்சி: இனி கையில் ஆதார் கார்ட் தேவையில்லை

image

காஞ்சி மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 7, 2026

காஞ்சி: வீட்டின் பின்புறம் நேர்ந்த விபரீதம்

image

உத்திரமேரூர் ஒன்றியம் ராவத்தந்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகம்மா (75). இவர் கடந்த 1-ந்தேதி வீட்டின் பின்புறம் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக பலியானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

காஞ்சி: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

image

காஞ்சிபுரம் மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு க்ளிக் செய்து மேரா ரேஷன் செயலியில் ரேஷன் எண் மற்றும் ஆதார் எண் பதிவு பண்ணுங்க.. அதில் PHH, AAY வந்தால் ரூ.3000 கன்பார்ம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 7, 2026

மதுார் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (ஜன.08) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 09:00 மணி முதல் மதியம் 03:00 மணி வரை கீழ் கண்ட இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. மதுார், அருங்குன்றம், சித்தாலபாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூர், பாலுார், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம், வாலாஜாபாத், கிதிரிபேட்டை, புத்தகரம், கீழ்ஒட்டிவாக்கம், வெண்குடி.

News January 7, 2026

குன்றத்தூர்: குடும்பத் தகராறால் நிகழ்ந்த கோரம்

image

குன்றத்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தையல் தொழிலாளி புருஷோத்தமன் (44), மதுப்பழக்கத்தால் வேலைக்குச் செல்லாததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, புருஷோத்தமன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனின்றி உயிரிழந்தார்.

News January 7, 2026

காஞ்சிபுரம்: சம்பவ இடத்துலயே துடிதுடித்து பலி!

image

காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டையைச் சேர்ந்த விவசாயக் கூலி ஜெகதீசன் (35) மற்றும் அவரது நண்பர் வெங்கடேசன் (35) ஆகியோர், கறவை மாடு வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது செவிலிமேடு புறவழிச்சாலையில் தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News January 7, 2026

காஞ்சிபுரம்: சாலையில் நடந்த கோர விபத்து

image

காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். கேபிள் ஆபரேட்டர் தொழில் செய்யும் இவருக்கு மனைவி & 2 பிள்ளைகள் உள்ளனர். கார்த்திகேயன் காவணிபாக்கத்திலிருந்து திருமுக்கூடல் செல்லும் போது சாலவாக்கம் கூட்டோடு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லோடு டாரஸ் லாரி மீது அதிகவேகமாக மோதியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட அவரை மீது மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.

News January 7, 2026

காஞ்சிபுரம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

காஞ்சிபுரம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!