India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில், பொங்கலுக்கு குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்குவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட வழங்கல் அதிகாரி விஜியகுமார் மற்றும் அரசு அலுவலகங்களும் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு, நடைபெற்று வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் கலைச்செல்வி மோகன், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே…, SBI வங்கியில் காலியாக உள்ள 55 சிறப்பு அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.10ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுர மாவட்ட பகுதிகளில் வரும் ஜன.10 அன்று கன மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜன-11 அன்றும் மழை இருக்குமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே ஜன.10க்கு மேல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

காஞ்சிபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <

காஞ்சிபுரம் மக்களே, பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

ஸ்ரீபெரம்பத்தூர் அருகே, மறைந்த தம்பியின் பிறந்தநாளை முன்னிட்டுச் சமாதி மீது பட்டா கத்தியால் கேக் வெட்டிய அண்ணன் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். சந்தவேலூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அய்யப்பன், தனது நண்பர்களுடன் விபத்தில் இறந்த தம்பியின் சமாதியில் கத்தியுடன் கொண்டாடிய வீடியோ வைரலானது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக அய்யப்பன், நரேஷ் மற்றும் நவீன்குமார் ஆகியோர் கைது.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் காஞ்சிபுரம் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.