India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகையின் வருகை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அவர் ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று சின்னசேலத்தில் நடைபெறும் காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து இன்று அனைத்து துறை அலுவலர்களுடன் ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் சம்பவத்தை தொடர்ந்து இன்று, கள்ளச்சாரயத்துக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுப்பதில் காட்டிய அலட்சியதுக்கு திமுக அரசுதான் காரணம். 6 நாட்களில் 41 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதால் சட்டம் ஒழுங்கில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கடலோர பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் காற்று 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தகவல்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின் நுகர்வோருக்கான மாதாந்திர குறைக்கேட்பு முகாம், கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும். அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சியில் ஆறாம் தேதியும், திருக்கோவிலூரில் 13ஆம் தேதியும், சங்கராபுரத்தில் 20ஆம் தேதியும், உளுந்தூர்பேட்டையில் 27ஆம் தேதியும் கூட்டம் நடைபெறும் என மின்வாரிய மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் நேற்று தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில், மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) ரிஷிவந்தியம் அடுத்த சீர்பனாந்தல் கிராமத்திலும், திருக்கோவிலூர் அடுத்த விளந்தையிலும், திருநாவலூர் அடுத்த சேந்தமங்கலத்திலும், உளுந்தூர்பேட்டை அடுத்த திருப்பெயரிலும், கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடியிலும் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா எனபதை கமென்டில் குறிப்பிடவும்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் மகாலில் ஆகஸ்டு 9ஆம் தேதி காங்கிரஸ் கள்ளக்குறிச்சி மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் நடைபெற இருந்தது. இந்த செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக கள்ளக்குறிச்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்கணேஷ் இன்று அறிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு இன்று மழை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் இன்றைக்கு மழை வர வாய்ப்புள்ளதா என கமென்ட் செய்யுங்கள்.
ஜி.அரியூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் தியாகதுருகத்தில் வேலை செய்து வருகின்றார். இவர் தியாகதுருகம் பகுதியில் 17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பம் ஆக்கியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமி கேட்டதற்கு அவரை ஜாதி பெயரை சொல்லி விக்னேஷ் திட்டி உள்ளார். இதுகுறித்து சிறுமி நேற்று காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விக்னேஷை நேற்று போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.