India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று (ஜன.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

தென்சிறுவலூரை சேர்ந்த ரகுபதி தனது நண்பர் கவியரசனுடன் சாரதி என்பவரது பைக்கில் கள்ளக்குறிச்சி ஆர்டிஓ ஆபீஸிற்கு சென்றுள்ளார். அப்போது ஏமப்பேர் பைபாஸ் பகுதியில் இன்று எந்தவிதமான செய்கையும் செய்யாமல் திடீரென சாலை கடக்க முயன்ற லியோ ஸ்டேன்லியின் கார் பைக் மீது மோதியது. இதில் கவியரசன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் மாவட்ட திறன் குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசின் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் குறள் வார விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (29.01.2026) அவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டுகளை தெரிவித்தார். இதில் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பங்கேற்பு சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். கள்ளக்குறிச்சி மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

கள்ளக்குறிச்சி: வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, வருகின்ற (பிப்.1)ம் தேதி அனைத்து மது கடைகளும் மூடப்பட வேண்டும் என கலெக்டர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில வாணிய கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகள் மற்றும் நட்சத்திர ஹோட்டலில் உள்ள மது கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என அறிவித்துள்ளார்.

சின்னசேலம் ரயில் நிலையத்தில் சரக்கு இறங்கு தள வசதி உள்ளது. இதனால் சென்னை தூத்துக்குடி போன்ற இடங்களில் வரும் முட்டைகள் சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு வருகிறது. அதைப்போல இன்று சென்னையில் இருந்து வந்த 1228 மெ.டன் யூரியா உர மூட்டைகளை கள்ளக்குறிச்சி சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <
Sorry, no posts matched your criteria.