Kallakurichi

News January 31, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஜன.30) இரவு முதல் இன்று (ஜன.31) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

வங்கியாளர்கள் உடன் ஆட்சியர் ஆலோசனை!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் உடடான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் மற்றும் அரசின் துறை சார்ந்த அதிகாரிகள், வங்கியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 30, 2026

கள்ளக்குறிச்சி: புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

image

கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக மனோகரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே விழுப்புரம் மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு காவல் ஆய்வாளர்கள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News January 30, 2026

மருத்துவமனையின் இறுதிக்கட்ட கட்டுமான பணி குறித்து ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரப் பகுதியில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டட பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளரும் கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன் கௌதம சிகாமணி இன்று நேரில் பார்வையிட்டு கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

News January 30, 2026

கள்ளக்குறிச்சியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்!

image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மஹாலில் ‘உலகம் உங்கள் கையில் திட்டத்தின்’ கீழ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்துகொண்டு மடிக்கணினிகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

News January 30, 2026

கள்ளக்குறிச்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 30, 2026

‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ !

image

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் அரசுப் பேருந்துகளில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
எம்.எஸ்.பிரசாந்த் இன்று (30.01.2026) பேருந்துகளில் ஒட்டி விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உள்ளிட்டப் பலர் இருந்தனர்.

News January 30, 2026

SP தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு!

image

இந்திய சுதந்திர போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டும். அந்நாளில் தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

News January 30, 2026

கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

கள்ளக்குறிச்சி மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>ibpsreg<<>>.ibps.in/nabhindec25/ – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT

News January 30, 2026

கள்ளக்குறிச்சி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது pmjay.<>gov<<>>.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!